இரண்டரை ஆண்டுகளில் இல்லாததை விட, கடந்த அக்டோபர் மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா அதிக எண்ணிக்கையில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் – இடையிலான போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், இருநாடுகளும் பரஸ்பரமாக தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, ரஷ்ய படைகள் ஏவுகணை மற்றும் டிரோன்களை வீசி, நாளுக்கு நாள் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் உக்ரைன் மீது ரஷ்யா அதிக ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த அக்டோபரில் மட்டும் 270 ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.