ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் வண்ண சீருடை: மாற்றத்துக்கு காரணமான கெர்ரி பேக்கர்

கிரிக்​கெட்​டில் ஆரம்ப காலங்​களில் வெள்ளை நிற உடைகளில்​தான் வீரர்​கள் விளை​யாடி​னார்​கள். ஆனால் தற்​போது ஒரு​நாள் கிரிக்​கெட் மற்​றும் டி20 போட்​டிகளில் வண்ண சீருடைகளில் விளை​யாடு​கிறார்​கள். இந்த மாற்​றத்​துக்கு பின்​னர் பெரிய கதை​யும், போராட்​ட​மும் உள்​ளது. 1970-ம் ஆண்​டு​களில் தொலைக்​காட்சி பெட்டி (டி.​வி) கருப்பு வெள்​ளை​யில் இருந்து வண்ண நிறத்​துக்கு மாறியது. அப்​போது ஆஸ்​திரேலி​யா​வில் உள்ள மீடியா நிறு​வன​ரான கெர்ரி பேக்​கர் சேனல் 9 என்ற சேனல் நடத்தி வந்​தார்.

அவர், ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யத்தை அணுகி கிரிக்​கெட் போட்​டிகளை ஒளிபரப்புவதற்​கான உரிமம் கோரி​னார். வழக்​க​மான தொகை​யை​விட 8 மடங்கு அதி​கம் வழங்​கு​வ​தாக கூறி​னார். ஆனால் ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் ஒளிபரப்பு உரிமத்தை கொடுக்க மறுத்​தது. ஏனெனில் அவர்​கள் ஏற்​கெனவே அரசு நடத்தி வரும் ஏபிசி சேனலுக்கு 20 ஆண்​டு​கள் அடிப்​படை​யில் உரிமம் வழங்​கி​யிருந்​தனர்.

மேலும் தனி​யாரிடம் ஒளிபரப்பு உரிமத்தை வழங்​கி​னால் அவர்​கள் வியா​பார ரீதி​யில் மட்​டுமே செயல்​படு​வார்​கள், அது மக்​கள் மத்​தி​யில் கிரிக்​கெட்​டின் நன்​ம​திப்​புக்கு களங்​கத்தை ஏற்​படுத்​தி​விடும் என ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் கரு​தி​யது. ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யத்​தின் இந்த முடி​வால் அதிருப்தி அடைந்த கெர்ரி பேக்​கர், ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு எதி​ராக 1977-ல் ‘வேர்ல்டு சீரிஸ் கிரிக்​கெட்’ என்ற பெயரில் கிரிக்​கெட் போட்​டியை நடத்​தி​னார்.

இதில் விளை​யாடு​வதற்​காக வீரர்​களுக்கு அதிக அளவில் சம்​பளம் வழங்கி ஒப்​பந்​தம் செய்​தார். மற்ற தொடர்​களை​விட அதி​களவி​லான தொகை வழங்​கப்​பட்​ட​தால் ஆஸ்​திரேலிய வீரர்​கள் மட்​டும் இல்​லாமல் பல்​வேறு நாடு​களை சேர்ந்த முன்​னணி வீரர்​கள் வேர்ல்டு சீரிஸ் கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்று விளை​யாடி​னார்​கள். இதனால் சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் அதிருப்தி அடை​யத் தொடங்​கியது.

இதையடுத்து வேர்ல்டு சீரிஸ் கிரிக்​கெட் தொடரை நிறுத்த பல்​வேறு நடவடிக்​கைகளை எடுக்​கத் தொடங்​கியது. வேர்ல்டு சீரிஸ் கிரிக்​கெட் தொடரில் விளை​யாடும் வீரர்​கள் ஐசிசி நடத்​தும் தொடர்​களில் விளை​யாட முடி​யாது எனவும், மேலும் முதல்தர கிரிக்​கெட் போட்​டிகளில் விளை​யாட தடை விதிக்​கப்​படும் எனவும் மிரட்​டியது. இதை எதிர்த்​தும் வீரர்​களின் நலனுக்கா​வும் கெர்ரி பேக்​கர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். போட்​டிகளில் கலந்​து​கொள்​வது வீரர்​களின் உரிமை, அவர்​கள் போதிய வரு​மானம் இல்​லாமல் கிரிக்​கெட்டை தவிர்த்த மற்ற வேலைகளில் ஈடு​படு​கிறார்​கள், இதனால் அவர்​களின் நலனுக்​காகவே வேர்ல்டு சீரிஸ் கிரிக்​கெட் தொடர் நடத்​தப்​படு​கிறது என தனது வாதத்தை முன்​வைத்​தார்.

இதை ஏற்​றுக்​கொண்ட நீதி​மன்​றம் வேர்ல்டு சீரிஸ் கிரிக்​கெட் தொடரில் வீரர்​களுக்கு பங்​கேற்​ப​தற்கு தடை விதிக்​கக்​கூ​டாது என உத்​தர​விட்​டது. ஆனால் ஐசிசி இந்த விவ​காரத்தை எளி​தாக விட​வில்​லை. வேர்ல்டு சீரிஸ் கிரிக்​கெட் தொடர் நடத்​து​வதற்கு மைதானங்​களை வழங்​கக்​கூ​டாது என அனைத்து கிரிக்​கெட் வாரி​யங்​களுக்​கும் மறை​முக​மாக உத்​தர​விட்​டது. ஆனால் கெர்ரி பேக்​கரோ, 2 கால்​பந்து மைதானங்​களை குத்​தகைக்கு எடுத்து போட்​டிகளை நடத்​தி​னார்.

இந்த மைதானத்​தில் வெளி​யில் இருந்து தயார் செய்​யப்​பட்ட ஆடு​களத்தை (டி​ராப் இன் பிட்ச்) கொண்டு வந்து பொருத்​தி​னார்​கள். இந்த வகையி​லான ஆடு​களத்தை முதன் முதலில் அறி​முகப்​படுத்​தி​யது கெர்ரி பேக்​கர்​தான். டி.​வி.​யில் பிரைம் டைமை கணக்கு வைத்து போட்​டிகளை பகலிர​வாக மின்​னொளி​யில் நடத்​தி​னார். இதற்​காக வெள்ளை நிற பந்தை பயன்​பாட்​டுக்கு கொண்டு வந்​தார். மேலும் பல்​வேறு அணி​கள் விளை​யாடிய​தால் வித்​தி​யாசம் தெரிய வேண்​டும் என்​ப​தற்​காக​வும் வியா​பார ரீதி​யாக​வும் வெள்ளை சீருடைகளை நீக்​கி​விட்டு வண்ண சீருடைகளை அறி​முகம் செய்​தார். கால் காப்​பு, கையுறை​களும் வண்ண நிறங்​களில் மாறின.

போட்​டிகளை பிரத்​யேக​மாக ஒளிபரப்பு செய்​வதற்​காக மைதானத்தை சுற்​றி​லும் 6 கேம​ராக்​களை பயன்​படுத்​தி​னார். இந்த போட்​டிகள் பார்ப்​ப​தற்கு புதி​தாக​வும், பிரம்​மாண்​டாக​வும் இருந்​த​தால் ரசிகர்​கள் மத்​தி​யில் ஆதரவு பெரு​கியது. போட்​டிகளை காண மைதானத்​துக்கு பெரு​மள​வில் குவி​யத் தொடங்​கி​னார்​கள். இதனால் டி.​வி. ரேட்​டிங் அதி​கரித்​தது. ஆனால் இந்​தத் தொடருக்​காக கெர்ரி பேக்​கர் பெரிய அளவில் செலவு செய்​த​தால் எதிர்​பார்த்த அளவில் வரு​மானத்தை ஈட்ட முடிய​வில்​லை.

இது ஒரு​புறம் இருக்க வேர்ல்டு சீரிஸ் கிரிக்​கெட் தொட​ரால் ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் பெரிய அளவில் நஷ்டத்தை சந்​திக்​கத் தொடங்​கியது. இதையடுத்து கெர்ரி பேக்​கருடன் பேச்​சு​வார்த்தை நடத்​திய ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் ஒளிபரப்பு உரிமத்தை வழங்க சம்​மதம் தெரி​வித்​தது. கெர்ரி பேக்​கரும் வேர்ல்டு சீரிஸ் கிரிக்​கெட் தொட​ரால் மேலும் நஷ்டம் அடைவதை தவிர்க்​கும் வகை​யில் அந்​தத் தொடரை கைவிட்​டார்.

அதே​நேரத்​தில் அவர், நினைத்​த​படி கிரிக்​கெட்​டில் பெரிய மாற்​றம் கொண்டு வந்​தார். தற்​போது கிரிக்​கெட் ரசிக்​கிற மாதிரி இருப்​ப​தற்​கும், பல்​லா​யிரக்​கணக்​கான கோடிகளில் வியா​பாரங்​கள் நடை​பெறு​வதற்​கும், வீரர்​கள் கோடிகளில் சம்​பளம் பெறு​வதற்​கும், அங்​கீ​காரம் கிடைத்​தற்​கும் கெர்ரி பேக்​கரும் ஒரு முக்​கிய காரணம். அவர், கொண்​டு​வந்த மாற்​றங்​களே ஒரு​நாள் போட்​டிகளில் பயன்​படுத்​தப்​பட்​டன. இது டி20 போட்​டிகளி​லும் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டது. எனினும்​ பாரம்​பரி​யான முறை​யில்​ டெஸ்ட்​ போட்​டிகள்​ மட்​டும்​ வெள்ளை சீருடையில் விளையாடப்பட்டு வருகின்றன.

Hindu Tamil

 

aru

சுமந்திரன் சீற்றம்; அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும்

November 18, 2025

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக்

pu)Nama

புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் – நாமல்

November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது