ஒன்டாரியோ உயர்நீதிமன்ற நீதிபதி பேரணி திட்டமிட்டபடி நடைபெறலாம் என்று தீர்ப்பளித்ததையடுத்து, சனிக்கிழமை (14.03.2026) டொராண்டோவில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் அல்-குத்ஸ் நாள் பேரணி நடைபெற்றது.
பேரணியில் கலந்து கொண்டவரும், அதன் ஏற்பாட்டாளர்களுக்கான வழக்கறிஞருமான ஸ்டீபன் எல்லிஸ்(Stephen Ellis) தடையுத்தரவு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதில் அனைவரும் “மிக மகிழ்ச்சியாக” உள்ளதாக கூறினார்.
“இது வெற்றி பெறாது என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். எங்கள் உரிமைகளை அவர்கள் இவ்வாறு பறிப்பது அபத்தமானது,” என்பதோடு “இந்த தடையுத்தரவு முயற்சி அரசியல் நோக்கத்துடன் எங்கள் உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இன்று அந்த உரிமைகள் உறுதிசெய்யப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.
இந்த தீர்ப்பு, டொராண்டோ நகர சபையின் இரண்டு உறுப்பினர்களும் ஒன்டாரியோ முதல்வருமான டக் பேர்ட் பேரணியைத் தடுக்க தடையுத்தரவு கோரியதற்குப் பிறகு வந்தது என்பதோடு வெள்ளிக்கிழமை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ஃபோர்ட் சட்டத்துறை அமைச்சரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டு, இந்த பேரணி “வெறுப்பும் யூத விரோதமும் வளர்க்கப்படும் இடமாக” இருப்பதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை நண்பகலில், சட்டத்துறை அமைச்சரை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களும் அல்-குத்ஸ் நாள் குழுவின் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. நீதிபதி தனது தீர்ப்பின் கூடுதல் விவரங்களை பின்னர் வெளியிடுவதாக தெரிவித்தார்.
டொராண்டோ ஏற்பாட்டாளர்களின் விளக்கப்படி, அல்-குத்ஸ் நாள் என்பது பாலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வை விளம்பரப்படுத்திய சமூக ஊடக பதிவுகளில், “இரான் மற்றும் லெபனானில் போர் வேண்டாம்” என்றும் கோரிக்கை விடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், டொராண்டோவில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே எதிர்ப்பு பேரணியும் நடைபெற்றது. அதன் ஏற்பாட்டாளர் சல்மான் சிம்ர், அல்-குத்ஸ் நாள் பேரணி ஈரான் ஆட்சியை ஆதரிப்பது “அருவருப்பானது” என்று கூறினார்.