இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) பங்கேற்பதற்கு இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் எஷான் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களான நுவான் துஷார, மதீஷ பத்திரண மற்றும் வனிது ஹசரங்க ஆகியோர் கிரிக்கெட் சபையின் தடையில்லாச் சான்றிதழை இன்னும் பெறவில்லை.
மலிங்க தவிர கமிந்து மென்டிஸ், பதும் நிஸங்க, துஷ்மந்த சமீர, தசுன் ஷானக ஆகியோரும் ஏற்கெனவே ஐ.பி.எல்லில் இணைவதற்கு தடையில்லாச் சான்றிதழை பெற்றுக் கொண்டுள்ளனர்.