லண்டனைச்சார்ந்த அயலக தமிழர் – புதுமுக நடிகர் தக்ஷ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஏ பியூட்டிஃபுல் பிரேக் அப் ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அஜித் வாசன் உக்கினா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ ஏ பியூட்டிஃபுல் பிரேக் அப் ‘எனும் திரைப்படத்தில் தக்ஷ், ‘அகத்தியா ‘ படப் புகழ் நடிகை மாடில்டா பாஜர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கே. ஆர். குணசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 5 நேச்சர்’ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் – இளமையான காதலையும் அமானுஷ்யமான அனுபவங்களையும் கலந்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.