ஏர்பஸ் ஊழல் விசாரணை: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அழைப்பாணைக்கு மஹிந்த ராஜபக்ச பதில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) தனக்கு விடுத்துள்ள அழைப்பாணையை ஏற்று, குறித்த தேதியில் ஆணைக்குழுவில் முன்னிலையாகப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மறுவிக்கப்பட்ட ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, மே 12-ஆம் தேதி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கடிதம் மூலம் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி:
2013-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆறு ஏர்பஸ் A330 மற்றும் எட்டு A350 விமானங்களை கொள்வனவு செய்தபோது, கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நயோமாலி விஜேநாயக்க ஆகியோர் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணை நடைபெறுகிறது.

நீதிமன்ற விசாரணையின் போது லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவிக்கையில்:

பெறப்பட்ட லஞ்சப் பணத்தில் 20 மில்லியன் ரூபாய் அப்போதைய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிடம் வழங்கப்பட்டதாகவும்,

60 மில்லியன் ரூபாய் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கபில சந்திரசேன வாக்குமூலம் அளித்ததாகக் குறிப்பிட்டனர்.

இருப்பினும், கபில சந்திரசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரின்சி அர்சகுலரத்ன இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் தனது கட்சிக்காரர் அச்சுறுத்தப்பட்டு, அதன் மூலமே இத்தகைய வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் (Affidavit) தாக்கல் செய்துள்ளார்

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்