சென்னை:
சட்டமன்றத்திற்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன் என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல திமுகவினர் முதல்வர் விஜய் குறித்துத் தொடர்ந்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வருவதைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அரசியல் களத்தை மக்களுக்காகச் சேவையாற்றும் தளமாகப் பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தைத் தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாகக் கருதியவர்கள், தேர்தல் தோல்வியின் விரக்தியில் இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்றத்திற்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் எனப் பேசியுள்ள திமுக எம்.எல்.ஏ. மீது சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ள அவர், \”எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதைத்தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்\” என்று காட்டமாக எச்சரித்துள்ளார்.
#VanniArasu #CMVijay #Markandayan #DMK #TVK #SocialJusticeMinister #AssemblyThreat #PoliticalControversy #TamilNaduPolitics #BreakingNews #BMNews #TamilNews #LatestUpdate #GovernmentResponse #StatePolitics #PoliticalRetort #PublicWelfare #Governance #CurrentAffairs #PoliticalTension