எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் ஆட்சியைக் கவிழ்ப்போம் – நாமல் ராஜபக்ஷ சூளுரை

‘பொய்களை நிறுத்தி தயவுசெய்து இனியாவது வேலைகளை ஆரம்பியுங்கள்’ என்று இன்று மக்கள் கூறியுள்ள செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறில்லை என்றால் எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை வீழ்த்துவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நுகேகொடையில் நேற்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற அரச எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாமல்,

அரசாங்கம் சிறைச்சாலைகளை காண்பித்தாலும் அதற்கு அஞ்சாமல் தமது பொறுப்பை நிறைவேற்றுவதற்காக கூடியுள்ள சகல எதிர் காட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எந்த ஒரு தனிப்பட்ட தேவைக்காகவும் நாம் இங்கு கூட வில்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்கள் நலனுக்காக அவர்களுக்கான போராட்டத்திற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு எமது அரசியல் குழு தயாராக உள்ளது.

எல்லையற்று வழங்கிய வாக்குறுதிகளையும் கூறிய பொய்களையும் மக்களுக்கு உணர்த்துவது பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகிய எமது கடமையாகும். எனவே இனியாவது பொய் கூறுவதை நிறுத்திவிட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். தமது அரசியல் தேவைகளுக்காக அரச உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தால் பழிவாங்கப்படுகின்றனர். அரசியல் செய்வதற்கு ஜனாதிபதி இருக்கின்றார், எனவே அரசியலில் இருந்து விலகும் மாறு பொலிஸ்மா அதிபருக்கு நினைவுபடுத்துகின்றோம்.

அரசாங்கத்துக்கும் எமக்கும் உள்ள அரசியல் பிரச்சனைகளை நாம் அரசாங்கத்துடன் மோதி தீர்த்துக் கொள்கின்றோம். அதில் பொலிசார் தலையிடத் தேவையில்லை. போதைப் பொருட்களை கைப்பற்ற வேண்டாம் என நாம் கூறவில்லை. ஆனால் துறைமுகத்திலிருந்து அனுமதியின்றி அனுப்பப்பட்ட 323 கொள்கலன்களிலுள்ள போதைப்பொருட்களும் உள்ளடங்களாக அனைத்தையும் கைப்பற்றுமாறு வலியுறுத்துகின்றோம்.

போதைப் பொருள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தும் அதே வேலை தமது கட்சியினர் போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டால் அதனை மூடி மறைக்கின்றனர். அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது. அரசாங்கத்தின் அந்த திட்டங்கள் ஒருபோதும் வெற்றியளிக்காது.

‘பொய்களை நிறுத்தி தயவுசெய்து இனியாவது வேலைகளை ஆரம்பியுங்கள்’ என்று எங்கள் மக்கள் கூறிய செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுமாறு அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம். அவ்வாறில்லை என்றால் எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கத்தை வீழ்த்துவோம் என்று இங்கு உறுதியாக கூறுகின்றேன் என்றார்.

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்