சென்னை:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) எம்.எல்.ஏ.க்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குதிரைபேரம் மற்றும் பேரம் குறித்த விவகாரத்தில், தவெக அரசு அமைச்சரும் ஐ.யூ.எம்.எல் தலைவர்களில் ஒருவருமான ஷாஜகான் வெளியிட்டுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து சையது பாரூக் பாஷா மற்றும் அமைச்சர் ஷாஜகான் தெரிவித்த முக்கியக் கருத்துகள்:
-
சையது பாரூக் பாஷாவின் விளக்கம்: திருவண்ணாமலை பொதுக்கூட்டத்தில் தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை எனக் குறிப்பிட்ட சையது பாரூக் பாஷா, “அதிமுக தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று திமுகதான் எங்களிடம் கூறியது. ஆனால், அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அந்த அரசியல் கொள்கையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான் கொள்கை அடிப்படையிலான தவெக அரசுக்கு ஆதரவளித்தோம்; நாங்கள் எப்போதுமே கொள்கைக்குத்தான் மதிப்பு அளிப்போம், கோடி ரூபாய்க்கு விலைபோக மாட்டோம்” என்றார்.
-
அமைச்சர் ஷாஜகானின் அதிரடிப் பேச்சு: இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஷாஜகான், “சோபா மாடல் அரசு, முஸ்லிம் லீக் பணம் வாங்கியது போன்ற விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறினார். மேலும் கடந்த மே மாதம் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளை வெளிப்படையாக உடைத்துப் பேசிய அவர், “மே 7-ஆம் தேதி ஐ.யூ.எம்.எல் கட்சியைத் தொடர்புகொண்டு அதிமுக தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று கூறியது திமுகதான். ஆனால், மே 8-ஆம் தேதி அவர்கள் திடீரென வேறொரு முடிவை எடுத்தனர்” என்றார்.
-
ஹோட்டலில் அடைத்த ரகசியம்: ஐ.யூ.எம்.எல் கட்சியைச் சேர்ந்த தாங்கள் திமுகவின் இந்த நிலைப்பாட்டை ஏற்க மறுத்த காரணத்தினால்தான், தங்களது கட்சியின் இரண்டு உறுப்பினர்களை மே 8-ஆம் தேதி இரவோடு இரவாக ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்து மிரட்டியது யார்? தங்களுக்குக் காவல் போட்டது யார்? என்பதையெல்லாம் வெளியில் சொல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டாம் என அவர் கடுமையாக எச்சரித்தார்.
-
தவெக ஆதரவுக்கான காரணம்: தமிழ்நாட்டில் மீண்டும் ஆளுநர் ஆட்சி போன்ற அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே தாங்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததாகவும் அமைச்சர் ஷாஜகான் விளக்கம் அளித்துள்ளார்.
Hashtags:
#Shahjahan #SyedFarooqBasha #IUML #ChiefMinisterVijay #TVKGovt #DMK #HorseTradingAllegations #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #TamilNews #BreakingNewsTamil #TrendingNewsTamil