ஈழத்து இசைத்துறை மற்றும் தமிழ் ராப் (Tamil Rap) உலகில் மிகவும் பிரபலமான ஒரு இசை அமைப்பாளரும் புகழ்பெற்ற கலைஞருமாகத் திகழும் திஷோன் விஜயமோகன் ஊடகங்களுக்கு முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது இனிமேல் ‘எங்கடை பொடியள்” – நிகழ்வுகளில் தான் இனிமேல் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்திருக்கின்றார். அத்துடன் தனது இசைப்பயணத்திற்கு ஆதரவாக இருந்த சகலருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இசைத் தயாரிப்புத் துறையின் வாயிலாக இசைப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் வளர்ந்து வரும் புதிய கலைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கவும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது ‘எங்கடை பொடியள்” இசைப் பயணத்தின் முடிவு புதிய அத்தியாயமொன்றின் தொடக்கமாக இருக்கும் எனவும் சகல வழிகளிலும் தனக்கு ஆதரவுகளை வழங்கியவர்களுக்கு மீண்டும் நன்றியுடன் நினைவுகொள்வதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.