ஊழல் என்பது ஒரு சாதாரண விடயம் என்ற நிலை இலங்கையில் மாற்றப்படவேண்டும்!

1978ம் ஆண்டின் பின் இலங்கையில் ஊழல் என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது, அதனை மாற்றி அமைக்க தற்போதைய அரசு முயற்சிக்கிறது என்று பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறைப் பேராசிரியர் ரமேஸ் ராமசாமி தெரிவித்தார்.

நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் கண்டி ஶ்ரீ புஸ்பதான மண்டபத்தில் நடத்திய சிவில் அமைப்புக்களின் அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத் அவர் இதனைத் தெரிவித்தார். நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் நடத்தி வரும் கூட்டத் தொடரில் 251 வது கூட்டம் கண்டியில் இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024ம் ஆண்டு சர்வதேச ஆய்வுகள் இரண்டில் இலங்கை பற்றிய விடயங்கள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று சுவீடனை மையமாகக் கொண்ட ஒரு அமைப்பு வெளியிட்ட தகவலாகும்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் ஜனநாயம் வளர்ச்சி கண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 108 நாடுகளில் இலங்கைக்கு 58 வது இடத்தை வழங்கியுள்ளது. இதற்கு ஆதாரமாக இறுதியாக நடந்த தேர்தல்கள் நியாயமாக நடந்துள்ளதாகவும் அதற்கு முன்னர் அந்த அளவு நம்பகத்தன்மை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் அமேரிக்காவின் “பிரீடம் ஹவுஸ்” என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலும் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட்டமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ஷ ஆட்சிகளில் ஜனநாயக ரீதியில் தேர்தல்கள் இடம் பெற்றதாகக் காட்டிக் கொண்டாலும் முற்று முழுதாக அவ்வாறு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சர்வதேச ஆய்வுகள் இலங்கை பற்றி பல்வேறு தகவல்களை வெளியிட்ட போதும் அதில் ஒரு உண்மையை வெளிக்காட்டியுள்ளது. அதாவது 1978ம் ஆண்டின் பின் இலங்கையில் ஊழல் சாதாரண ஒரு விடயமாகவும், ஒரு கலாச்சாரமாகவும் மாறியுள்ளதமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இருப்பினும் தற்போதைய அரசு ஊழல் ஒழிப்பு விடயத்தில் ஈடுபட்டுள்ளதை வரவேற்கமுடியும். இருப்பினும் அரசியல் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட வில்லை எனலாம்.

அதே போல் தனி நபர் சார்ந்த மனித உரிமைகள் பற்றிய ஏற்பாடுகள் காணப்பட்டாலும், ஒரு பரந்த குழு சார்பான மனித உரிமைகள் பற்றிய விடயம் குறைவாகவே உள்ளன. உதாரணமாக உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பாக பாலினம் சார்ந்த கோட்டாக்கள் (பெண்களுக்கான ஒதுக்கீடு) இருந்த போதும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக பெண்களுக்கான ஒதுக்கீடு பற்றி ஏதும் இல்லை.

நாம் இலங்கையர் என்ற கருத்தை வளர்க்க பல்வேறு முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டாலும் இனத்துவ அடையாளங்களுக்கு மதிப்பளிக்கும் திட்டங்கள் குறைவாக உள்ளன. நாட்டின் பல்வகைமையை மதிக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் தேவை.

எனவே நீதிக்கான ஒரு சமூகத்தை கட்டி எழுப்பும்போது இவ்விடயங்களும் கவணத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

இங்கு உரையாற்றிய பேராசிரியர் ரொகான் சமரஜீவ தெரிவித்தாவது,

இலங்கையில் பின்பற்ற முயற்சிக்கப்பட்ட குடும்ப ஆட்சி என்ற விடயத்தை வண. மாதுலுவாவே சோபித தேரர் தலைமையிலான ‘சாதாரண சமூகத்திற்கான தேசிய இயக்கம்’ 2012ல் மாற்றி அமைக்க பங்களிப்பு செய்தது. அதே போல் 40 வருடங்களுக்கு முன் பயங்கரவாத தடுப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

இது சுமார் 6 மாத காலத்திற்கு மட்டுமே என்று கூறப்பட்டது. புலிகளை அடக்குவதற்கு மட்டுமே என்று கூறப்பட்டது. ஆனால் 40 வருடமாகியும் அது இன்னும் அமுலில் உள்ளது.சிறிய விடயங்களுக்கும் அது பயன்படுத்தப்படுகிறது. இவை மாற்றப்பட வேண்டும். எனவே எதிர்காலத்தில் நாட்டு மக்கள் விரும்பும் இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்த ‘சாதாரண சமூகத்திற்கான தேசிய இயக்கம்’ முயற்சி எடுக்கும் என்றார்.

பேராதனைப்பர்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்கா, பேராசிரியர் சுனில் ஜயசேக்கர, கலாநிதி ஆரியரத்தன ஹேரத் உற்பட பலர் உரையாற்றினர்.

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்