
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 20 பயணிகள் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து தாதல்ல பகுதியில் ஓட்டுநர் உறங்கியதால், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகிச் சென்று அருகிலிருந்த சுவரில் மோதியது தெரியவந்துள்ளது.
விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதுடன், இவ்விவகாரம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.