உருவாக்க நிலை செயற்கை நுண்ணறிவால் பெண்கள் அதிகம் பாதிப்பு?

உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து அபாயத்தை எதிர்கொன்கின்றனர் என்பதை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தரவுகள் உறுதிப்படுத்துகிறது.

குறிப்பாக தானியக்கம் சார்ந்த பணிகளில் அதிகளவில் ஈடுபடுவதாலும் தொழிநுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாலுமே பெண்கள் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்வதாக புதியதொரு அறிக்கை குறிப்பிடுகிறது.

உருவாக்கும் செயற்கை நுண்ணறிவானது (Generative Artificial Intelligence / GenAI) வேலை உலகை மறுவடிமைத்து வருகிறது. இந்த செயன்முறையானது உற்பத்தித் திறன்களை அதிகரித்து வேலையின் தரத்தை மேம்படுத்தம் அதேவேளை இதன் தாக்கங்கள் பாலின சமத்துவமற்றவையாக காணப்படுகிறது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO) வெளியிட்ட புதிய ஆய்வுக் குறிப்பில், உருவாக்கும் செயற்கை நுண்ணறிவானது (GenAI) ஆண்களை விட பெண்களின் வேலைகளை இது அதிகம் பாதிக்கும் என்றும் பெண்கள் அதிகமாக காணப்படும் தொழில்துறைகளில் இது இரட்டிப்பாக இருக்கும் என்றும் எச்சரிக்கின்றது.

தொழில் பிரிவினை மற்றும் வேலை உலகின் பாலின சமத்துவம் – உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (Gen AI, occupational segregation and gender equality in the world of work) என்ற ஆய்வுக் குறிப்பு பெண்கள் மூன்று முக்கிய காரணங்களால் GenAI தொழில்நுட்பத்தின் தாக்கத்திற்கு அளவுக்கு மீறி ஆளாக நேரிடும் என்று விளக்குகிறது. அவையாவன:

தானியக்கத்திற்கு தானியங்கிமயமாக்கத்திற்கு உட்பபடக்கூடிய தொழில்களின் பெண்களே கூடியளவில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கின்றனர்; செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறைகளிலும் அறிவியல், தொழிநுட்பம் பொறியில் மற்றும் கணிதம் (STEM) தொழில்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் குறைவாகவே காணப்படுகின்றது; மற்றும் செயற்கை நுண்ணறிவானது பெரும்பாலும் சமூகத்தில காணப்படும் பாலின பாகுபாடுகளை பிரதிபலிக்கின்றன அல்லது மீண்டும் உருவாக்குகின்றது.

அதீத அபாயம் நிறைந்த தொழில்களில் பெண்கள் அதிகமாக காணப்படுதல்.

கிடைக்கப்பெற்ற நாடுகள் தொடர்பான தரவுகளின்படி, ஆண்கள் அதிகம் உள்ள துறைகளை விட, பெண்கள் அதிகளவில் பணியாற்றும் துறைகளில் GenAI தாக்கம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் சுமார் 16 சதவீத வேலைகளே GenAI தொழில்நுட்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாகும் நிலையில், பெண்கள் அதிகம் பணியாற்றும் துறைகளில் அது 29 சதவீதமாக உள்ளது.

குறிப்பாக, வேலைகள் தானியங்கி மயமாக்கப்படும் (Automation) அபாயத்தைப் பொறுத்தவரை இந்த வேறுபாடு இன்னும் அதிகமாக உள்ளது. பெண்கள் அதிகம் உள்ள துறைகளில் 16 சதவீத வேலைகள் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பிரிவில் உள்ளன. ஆனால், ஆண்கள் அதிகம் உள்ள துறைகளில் இது வெறும் 3 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான அபாய நிலையானது தொழில் பாகுபடுத்தலுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவை. பெண்கள் மிக அதிகமாக காணப்படும் துறைகளாக எழுதுவினைஞர், நிருவாகம் மற்றும் வியாபாரம் சம்மந்தமான தொழில் வகிபாகங்களான செயலாளர், வரவேற்பாளர், ஊதியப் பதிவாளர் மற்றும் கணக்கியல் உதவியாளர் போன்றவை காணப்படுவதோடு இவ்வகைப் பணிகளில் பல செயற்பாடுகள் வழக்கமானதாகவும் குறியீட்டாகக் கூடியதாகவும் இருப்பதனால், GenAI மூலம் இவை மாற்றமடையும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, ஆண்கள் கட்டுமானம் உற்பத்தி மற்றும் கைத்தொழில் களில் அதிகம் பிரதிநிதித்தும் அதேவேளை அத்தகைய தொழில்களில் எளிதில் தானியக்கத்துக்கு உட்படுத்த முடியாது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளில் 88 சதவீத நாடுகளில் ஆண்களை விட பெண்களே Generative AI தொழில்நுட்பத்தின் தாக்கத்திற்கு அதிகளவில் ஆளாக நேரிடும் சூழல் உள்ளது. பல பொருளாதாரங்களில், பெண்களின் வேலைவாய்ப்பில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை GenAI தொழில்நுட்பத்தின் நேரடித் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய நிலையில் உள்ளன. இவற்றில் சுவீட்சர்லாந்து ஐக்கிய இராச்சியம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் கரீபியன் மற்றும் பசுபிக் பிராந்தியங்களிலுள்ள சிறு தீவுகளும் அடங்கும். உயர் வருமான நாடுகளில் சுமார் 41 சதவீனமை தொழில்கள் GenAI தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கின்ற அதேவேளை குறைவருமான நாடுகளில் இது 11 சதவீதமாக மட்டுமே காணப்படுகிறது. இவை தொழில் கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் தயார்நிலை ஆகியவற்றிலுள்ள வேறுபாடுகளை பிரதிபலிக்கின்றன.

“உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு ஒரு நடுநிலையான தொழில் சந்தையில் உள்நுழையாது” என ILO ஆய்வின் இணை ஆசிரியர் அனம் பட் (Anam Butt) தெரிவிக்கிறார். பாகுபாடு கொண்ட சமூக மரபுகள், சமமற்ற பராமரிப்பு பொறுப்புக்கள் மற்றும் ஆண் – பெண் தேவைகளை முழுமையாக பிரதிபலிக்காத பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சந்தை கொள்கைகள், யார் எந்த தொழிலில் எந்த நிபந்தனைகளில் நுழைகின்றனர் என்பதை தீர்மானித்து வருகின்றது. இதன் விளைவாகவே தானியக்கத்துக்கு அதிகமாக முகங்கொடுக்கும் தொழில்களில் பெண்கள் அதிகமாக குவிந்து காணப்படுவதோடு செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில்களில் குறைவாகவும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். இதன் விளைவாக இத்தொழிநுட்ப மாற்றத்தில் அவர்கள் அதிக அபாயங்களை முகங்கொடுப்பது மாத்திரமன்றி குறைந்த வாய்ப்புக்ளையே பெறுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளனர்

தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் GenAI புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அந்த வாய்ப்புகளில் இருந்து பெண்கள் பெருமளவில் விலக்கப்பட்டே உள்ளனர்.

உலகளாவிய ரீதியில் 2022 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவுப சார்ந்த பணியாளர்களில் பெண்கள் வெறும் 30 சதவீதம் மட்டுமே காணப்பட்டனர். இது 2016 ஆம் ஆணடுடன் ஒப்பிடுகையில் வெறும் வெறும் 4 சதவீத உயர்வு மட்டுமே ஆகும். மேலும் பொறியியல் மற்றும் மென்பொருள் உருவாக்கம் போன்ற அதிக தேவையுள்ள STEM சார்ந்த பணிகளிலும் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.

இந்தச் சமநிலையின்மை கவலைக்குரியது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான பணிகள் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரமிக்க பதவிகளில் பெண்கள் இல்லாதபோது புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயன்களை அவர்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. அதே வேளையில் நிறுவனங்களும் சிறந்த திறமையாளர்கள் பன்முகத்தன்மை மற்றும் புத்தாக்கதிற்கான வாய்ப்புகளை இழக்கின்றன.

சமூகத்தால் வடிவமைக்கப்பட்ட தொழிநுட்பம்

முந்தைய தொழில்நுட்பங்களைப் போலவே GenAI நடுநிலையானது அல்ல என்பதை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. தொழில்நுட்பங்கள் தற்போதுள்ள சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளுக்குள்ளேயே வடிவமைக்கப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால், அவை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாகுபாடுகளையும் ஓரவஞ்சனைகளையும் மீண்டும் பிரதிபலிக்கக்கூடும் AI தொழில்நுட்பங்களின் உருவாக்கம் மற்றும் பயன்பாட்டில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது, பாலின சார்புடைய (Gender-biased) தொழில்நுட்பங்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. முழுமையற்ற அல்லது ஒருபக்க சார்பான தரவுகளைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்ட AI அமைப்புகள், பெண்களுக்கான

வேலைவாய்ப்பு, ஊதிய நிர்ணயம், கடன் தகுதி மதிப்பீடு மற்றும் சேவைகளைப் பெறுதல் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. சாதி, இனம், விசேட தேவை அல்லது புலம்பெயர் நிலை போன்ற காரணிகளால் ஏற்கனவே பாகுபாடுகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு, இத்தகைய AI அபாயங்கள் மேலும் சவாலாக அமைகின்றன. முறையான பாதுகாப்பு வழிமுறைகள் இல்லையெனில், இத்தகைய சமத்துவமின்மைகளை GenAI உலகளாவிய அளவில் மேலும் விரிவுபடுத்தக்கூடும்.

கொள்கைத் தேர்வுகள் முக்கியமானவை

GenAI இன் மிகப் பரவலான தாக்கம் வேலை எண்ணிக்கையை விட வேலை தரத்திலேயே தங்கியிருக்குமென ILO வலியுறுத்துகிறது. GenAI வேலையின் தன்மையினை மாற்றக் கூடும் பணிச்சுமையை அதிகரிக்கக் கூடும் கண்காணிப்பை உயர்த்தக் கூடும் அல்லது சுய உரித்தை குறைக்கக் கூடும். ஆனாலும் அவற்றை பொறுப்புடன் வடிவமைத்து செயல்படுத்தினால் வேலைச் சூழ்நிலைகளை மேம்படுத்தவும் உற்பத்தித் திறனை உயர்த்தவும், வேலை – வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும் உதவலாம்.

“இன்று எம்மால் தெரிவுசெய்யப்படும் தேர்வுகளே GenAI சமத்துவத்தை உண்டாக்கும் சக்தியாக மாறுமா அல்லது ஏற்கனவேயுள்ள இடைவெளிகளை மேலும் உறுதிப்படுத்துமா என்பதைத் தீர்மானிக்கும்” என்று ILO ஆய்வுக்குறிப்பு தெரிவிக்கிறது.

GenAI இன் வடிவமைப்பு நடைமுறைப்படுத்தல் மற்றும் அதன் ஆளுமை ஆகியவற்றில் பாலின சமத்துவத்தை ஒருங்கிணைப்பது மிக அவசியமானது. அதே நேரத்தில் வேலைவாய்ப்புகளில் நிலவும் பாலினப் பாகுபாடுகளைக் களைதல், பெண்களின் தொழில்நுட்பத் திறன் விருத்திகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் அத்தோடு செயற்கை நுண்ணறிவு தொடர்பான பொறுப்புக்களில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதும் மிக முக்கியம்.

“பெண்களின் வேலைகளில் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கங்கள் முன்கூட்டியே நிரணயிக்கப்பட்டதொன்றல்ல” என ஆய்வின் பொருளாதார நிபுணரும் அறிக்கையின் இணை ஆசிரியருமான ஜானிக் பெர்க் குறிப்பிடுகிறார். “சரியான கொள்கைகள், சமூக கலந்துரையாடல் மற்றும் பால்நிலை மதிப்பளிக்கும் வடிவமைப்பாக இருந்தால் ஏற்கனவேயுள்ள பாகுபாடுகளை மேலும் வலுப்பெறுவதை தடுக்கலாம். இச்செயல்முறையில் வலுவான தொழிலாளர் சந்தை அமைப்புக்களும் சமூக கலந்துரையாடல்களும் மிகவும் முக்கியமானவை. GenAI பணியிடங்களில் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவை வடிவமைக்கப்படும் செயல்முறைகளில் அரசாங்கங்கள் தொழிலாளிகள் மற்றும் தொழில் வழங்குனர்கள் இணைந்து
கொண்டால் தொழிநுட்ப மாற்றம் நல்லதொரு உள்ளடக்கமான வேலை எதிர்காலத்தை முன்னேற்ற இது உதவும்.

suresh sal

தடுப்புக் காவலில் இருந்த சுரேஷ் சாலே வைத்தியசாலையில் அனுமதி

March 25, 2026

இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

sun

சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது

March 25, 2026

நாட்டுக்குள் சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்தி வந்த சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 முக்கிய போதைப்பொருள் குற்றவாளிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது

rus

948 ட்ரோன்களால் 24 மணித்தியாலங்களில் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல்

March 25, 2026

உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப்

uni

சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு கடிதம்!

March 25, 2026

இஸ்ரேலிய பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு ஐக்கிய

Baby death

தனியார் காணியொன்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

March 25, 2026

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத்

ci

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

March 25, 2026

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, வரி செலுத்தாமல் விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற சுமார் 15 மில்லியன்

a1

உருவாக்க நிலை செயற்கை நுண்ணறிவால் பெண்கள் அதிகம் பாதிப்பு?

March 25, 2026

உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து அபாயத்தை எதிர்கொன்கின்றனர் என்பதை சர்வதேச தொழிலாளர்

mis

மலைப்பாம்புடன் அழகிப் போட்டியில் நடனமாடிய இளம் பெண்!

March 25, 2026

சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளி ஒன்றின் அடிப்படையில், பாதுகாக்கப்பட்ட உயிரினமான மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு

pothu

சுகாதாரத் தொழிலாளி பொத்துவில் முதல் கிழக்கு ஆளுநர் அலுவலகம் வரை கவனயீர்ப்பு நடைபவனி

March 25, 2026

பிரதேச சபை செயலாளரின் மனித நேயக் கவனத்துக்கு கொண்டுவரப்படவேண்டிய விடயமாக, 2025ஆம் ஆண்டு 7, 8 மற்றும் 9வது மாதங்களில்

5

சுவிஸ் தூதுவருடன் இளைஞர் விவகார அமைச்சர் விசேட சந்திப்பு

March 25, 2026

இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் (Dr. Siri Walt) மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

heat

மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கடும் வெப்பநிலை

March 25, 2026

நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என

6

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட தம்பதியினரின் உடல் எச்சங்கள்!

March 25, 2026

கோவிட் காலத்தில் (ஆறு ஆண்டுகளுக்கு முன்பு) காணாமல் போன தம்பதியினரின் உடல்கள், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிபிட்டிய வத்தை