பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) வருண ஜயசுந்தரவைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இந்த கட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
வருண ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் (Writ) மனு மீதான விசாரணையின் போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் இந்த அறிவிப்பை விடுத்தார்.
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம், தம்மைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமர்ப்பணங்களை அடுத்து, இந்த மனுவை எதிர்வரும் புதன்கிழமை (17) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.