உகாண்டாவில் இரண்டு பஸ்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்தனர்.
உகாண்டா உள்ளிட்ட கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் சாலைகள் பொதுவாக குறுகியதாகவே இருக்கிறது. இதனால் அங்கு அடிக்கடி விபத்து நிகழ்கிறது. உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. அங்கு சாலை விபத்துகளில் கடந்த 2023 ல் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கடந்த ஆண்டு மட்டும் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது.