இ-வீசா சேவை வழங்குநர்கள் வரியை செலுத்த தவறிவிட்டனர்

இலத்திரனியல் வீசா (இ-வீசா) திட்டத்துடன் தொடர்புடைய சேவை வழங்குநர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செலுத்த வேண்டிய 1.4 மில்லியன் டொலருக்கும் அதிகமான வரிகளைச் செலுத்தத் தவறியுள்ளதாக இ-விசா ஒப்பந்தம் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த அறிக்கைக்கமைய வி.எப்.எஸ். வேல்ட்வைட் ஹோல்டிங்ஸ் (VFS VF Worldwide Holdings Ltd) நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஜி.பி.எஸ். தொழிநுட்ப சேவைகள் மற்றும் ஐ.வி.எஸ். க்ளோபல் நிறுவனமானது, 2024 ஏப்ரல் – ஆகஸ்ட்டுக்கு இடையில் விசா விண்ணப்பதாரர்களிடமிருந்து 2.5 சதவீத சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரி (SSCL) மற்றும் 18 சதவீத பெறுமதி சேர் வரி (VAT) ஆகிய இரண்டையும் சேகரித்துள்ளது.

இருப்பினும், இந்தத் தொகைகள் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரியில் சுமார் 172,970 டொலர்களாகவும், பெறுமதி சேர் வரியில் 1,245,390 டொலர்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு வரி செலுத்தாமையால் அரசாங்கத்தின் மொத்த வரி இழப்பு 1,418,360 டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. காலகட்டத்தில் நிறுவனங்கள் 373,991 விசா விண்ணப்பங்களைக் கையாண்டுள்ளன என்றும், குறைந்தபட்சம் 6.9 மில்லியன் டொலர் சேவை கட்டண வருவாயை ஈட்டியுள்ளன என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும், சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்குச் சேவை கட்டணங்கள் விதிக்கப்பட்ட விசா கட்டண விலக்கு நாடுகளிலிருந்து இந்த நிறுவனங்கள் மேலதிகமாக 1.8 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளன. இது முந்தைய இலத்திரனியல் பயண அனுமதி (ETA) முறைமையின் கீழ் உருவாக்கப்பட்டிருக்காத வருமானம் ஆகும்.

திணைக்களத்தால் அறவிடப்படும் விசா கட்டணத்துடன் மேலதிகமாக, புதிய முறைமையின் கீழ் விசா விண்ணப்பதாரர்கள் அனைவரும் விலக்குக்குத் தகுதியானவர்கள் உட்பட 18.50 டொலர் சேவை கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது என்று கணக்காய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

வரி செலுத்தத் தவறியமை, விசேட கணக்காய்வு அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட பல முறைகேடுகளில் ஒன்றாகும். இது இ-விசா திட்டத்தை வழங்குவதிலும் அமுல்படுத்துவதிலும் ஏற்பட்ட பாரிய நடைமுறைத் தவறுகள், வருவாய் இழப்புகள் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை ஆகியவற்றைக் குறிப்பிடுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nu

’ஹேஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

March 6, 2026

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா

kesa

பாதாள உலகக் குழுத் தலைவர் கொலை வழக்கு:’கெசல்பெத்தர பத்மே’ விசாரணைக்காலம் அதிகரிப்பு

March 6, 2026

கொழும்பு நீதவான் நீதிமன்றக் கூண்டுக்குள் வைத்து, பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கனேமுல்ல சஞ்சீவ’வைச் சுட்டுக் கொலை செய்ய முயன்ற

nor

வடக்கின் சமர் ஆரம்பம்

March 6, 2026

உலகெங்கும் வாழும் யாழ். கல்வி நிறுவனங்களின் பழைய மாணவர்களாலும், விளையாட்டு ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும்

iri

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

March 6, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர்

Judment

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு

March 6, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

கிளிமடுச்சேனை விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!

March 6, 2026

புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச்

v

அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

sen

சர்வதேச படுகொலைகள் பற்றிப் பேசுகின்றோம் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி எங்கே?

March 6, 2026

செஞ்சோலையில் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்ட பெண் குழந்தைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

le

இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்வு

March 6, 2026

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான

doha

டோஹாவின் வான்பரப்பில் இஸ்ரேலின் ஏவுகணைகள் முறியடிப்பு!

March 6, 2026

கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள்

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த