இஸ்ரேல் வீரர்களைத் தாக்குவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்; அதற்கேற்ற பதிலடி இருக்கும்

 

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை மையமாகக் கொண்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையிலான போர் நடந்து வருகிறது. 2 ஆண்டுகளை கடந்துள்ள இந்தப் போரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டினால் இரு தரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதாகக் கூறி, ஹமாஸ் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனிடையே, ராபா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 5 ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எங்கள் படைகளுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எங்கள் கொள்கை தெளிவானது. இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்களைத் தாக்குவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதற்கேற்ற பதிலடி இருக்கும். இன்று ராபாவில் நடந்த தாக்குதலில் காயமடைந்த நம் வீரர்களுக்கு விரைந்து குணமடைய வேண்டுகிறேன்,’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

jap

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் கென்ய பிரதம அமைச்சரவைச் செயலாளர் இடையில் முக்கிய சந்திப்பு!

March 7, 2026

இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்று வரும் ராய்சினா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கும் கென்யாவின் பிரதம அமைச்சரவைச் செயலாளர்

hon

வல்வெட்டித்துறையில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது!

March 7, 2026

யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால்

fffff

மீனவர்களுக்கான விசேட விழிப்புணர்வுத் திட்டம்

March 7, 2026

‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, மார்ச் 01ஆம் திகதி ஆரம்பமான “போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்” கீழ், போதைப்பொருள்

jaf un

ஊடக கற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்

March 7, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்

mid

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து அவசரக் கூட்டம்!

March 7, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை

heat wa

நாட்டில் நிலவும் வெப்பம் குறித்து கடுமையான எச்சரிக்கை

March 7, 2026

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, சப்ரகமுவ, வடமேல்

Srilankan air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து?

March 7, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில

no

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி!

March 7, 2026

வடக்கின் 119ஆவது சமரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிரடியாக வெற்றி பெற்றது. யாழ். மத்தியின் மைதானத்தில் வியாழக்கிழமை (05) ஆரம்பித்து

arre

போதைப்பொருளை தடுக்கும் தேசிய திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 1,073 பேர் கைது!

March 7, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை

ff

கசிப்புடன் இளைஞர் கைது!

March 7, 2026

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனைப் பகுதியில் 28,500 மில்லி லீற்றர் (28.5 லீற்றர் ) கசிப்புடன் 26

mazooth

பிராந்திய நாடுகள் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!

March 7, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில், ஈரானிய ஜனாதிபதி

nep

நேபாளத்தில் பாலேந்திர ஷா பிரதமராகும் வாய்ப்பு?

March 7, 2026

நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை