இஸ்ரேலின் ஆர்ட் மற்றும் டிமோனா ஆகிய இரு நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 01.20 மணியளவில் ஆர்ட் நகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாத்திரம் 88 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், 55 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.