இலவச பாடநூல் திட்டம்; தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழ் மன்னர்களின் பெயர்கள், அக்கால இலச்சினைகள்,கல்வெட்டுக்கள், திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. 1982 களில் இலவச பாடநூல் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்ட பின் தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் இந்த தவறு திருத்தப்படுமா என தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் பிரதமரிடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் பிரதம அமைச்சரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமாசூரியவிடம் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையில் சிங்கள மக்களைப்போல் தமிழர்களும் வரலாற்று அடிப்படைகளைக் கொண்ட, இந்த மண்ணுக்கு பூர்வீகமான சொந்த உரித்துக்கொண்ட தேசிய இனம். விஜயனும் தோழர்களும் இந்த நாட்டுக்கு வரும் முதலே பஞ்ச ரச்சரங்களுடன் நாகர்களாக, இயக்கர்களாக தமிழர்கள் ஈழத்து மண்ணில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை, மகாவம்சம் முதல் ஆய்வாளர்கள் வரை குறிப்பிடுகிறார்கள்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் இந்த மண்ணை வன்வழைப்பு செய்து அதிகார ஆட்சி செய்த போதும் தமிழர்கள் தீரத்துடன் அவர்களுக்கு எதிராக போராடியுள்ளார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கு மண்ணில் அரசுகள் அமைத்து சங்கிலியன்,பண்டாரவன்னியன், பரராஜசேகரன் போன்ற மன்னர்கள் தீரத்துடன் தாயக தேசத்திற்காக போராடியுள்ளனர்.

நல்லநாச்சி போன்ற பெண் சிற்றரசர்களும் இந்த மண்ணின் விடுதலைக்காக போராடித் தங்களை அர்ப்பணித்தவர்கள். 1920 ஆம் ஆண்டுக்கு பின்னர் அநாகரிக தர்மபால, டி.பி. ஜாவா போல ஆறுமுகநாவலரும் சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கவும், வளர்க்கவும் போராடியுள்ளார்.

இலங்கையில் உள்ள கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழ் மன்னர்களின் பெயர்கள்,அக்கால இலச்சினைகள்,கல்வெட்டுக்கள், திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. 1970களில் தமிழ், வரலாற்று பாடநூல்களில் தமிழரின் வரலாறு ஓரளவுக்கேனும் குறிப்பிடப்பட்டிருந்தது. 1982களில் இலவச பாட நூல் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டபின் தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வந்துள்ளதை காண முடிகிறது.

கடந்த யுத்த காலங்களை பயன்படுத்தி சங்கிலியன், பண்டாரவன்னியன்,நல்லநாச்சி, எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்களின் வரலாறுகள் இல்லாதழிக்கப்பட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா? இலங்கையின் விடுதலையில் தீரத்துடன் போராடிய தமிழ் மன்னர்களின் வரலாறு பாட நூல்களில் உட்புகுத்தப்படுமா? கல்வித்திட்டத்தில் வரலாற்றுப் பகுதியில் தமிழர் வரலாற்றுக்குரிய தனி அங்கீகாரம் வழங்குவதில் என்ன தடை இருக்கிறது?

தமிழர் வரலாற்றின் இலட்சினைகள், கல்வெட்டுக்கள், ஓலைகள் இந்நாட்டில் பாதுகாப்பாக பேணப்படுகின்றதா? சங்கிலியன்,பண்டாரவன்னியன் நல்லநாச்சி, எல்லாளன் போன்ற மன்னர்களின் வரலாறுகளை தமிழ், வரலாறு, சித்திரப் பாடங்களில் இருப்பதற்கு தங்களால் உறுதிப்பாடு தரமுடியுமா? என்று கேள்வியெழுப்பினார்.

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய

ran

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

December 6, 2025

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே

siva

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 6, 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க