இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்!

பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள் குறித்து தெளிவுபடுத்தவும், அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்கவும் இலங்கை பொலிஸ் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், நம்பிக்கையுடன் எவ்விடத்திற்கும் சுதந்திரமாக நடமாடவும் கூடிய பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்குப் பாடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பொதுப் பாதுகாப்பிற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், கவனக்குறைவு அல்லது விழிப்புணர்வு இன்மையால் மக்கள் இன்னமும் பாரிய குற்றங்களுக்குப் பலியாகி வருவதை அண்மைக்காலச் சம்பவங்கள் காட்டுகின்றன.

இதற்கு அண்மைய உதாரணமாக, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சம்பவத்தைக் குறிப்பிடலாம். அங்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் இரு பெண்கள் கடத்தப்பட்டு, அவர்களுக்குப் பலவந்தமாக மயக்கமருந்து கலந்த பானம் புகட்டப்பட்டு, அவர்களது தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மற்றவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

இவ்வாறான சம்பவங்களைக் கருத்திற் கொண்டு, பொதுமக்கள் தமது அன்றாட வாழ்வில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் பின்வரும் விடயங்களைக் கடைப்பிடிக்குமாறும் இலங்கை பொலிஸ் கேட்டுக்கொள்கிறது:

கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

பொது இடங்களிலோ அல்லது பொதுப் போக்குவரத்துகளிலோ உங்களை அணுகி நட்பாகப் பழக முனையும் அறிமுகமில்லாத நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் போலவோ அல்லது தெரிந்தவர் போலவோ நடிக்க முயற்சிக்கும் நபர்களை நம்புவதைத் தவிர்க்கவும்.
அந்நிய நபர்களால் வழங்கப்படும் டொபி(Toffees), சொக்லேட் (Chocolates), ஏனைய உணவுப் பொருட்கள், பானங்கள் அல்லது குடிநீரை உட்கொள்ள வேண்டாம். இவற்றில் மயக்கமருந்து அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம்.
நபர்களைக் செயலிழக்கச் செய்யவோ அல்லது தீங்கு விளைவிக்கவோ பயன்படுத்தப்படும் நச்சுத் தெளிப்பான்கள் (Poisonous Sprays) அல்லது மிளகாய்த் தூள் போன்ற பொருட்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும்.

மேலதிக பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

நெடுஞ்சாலைகளிலோ அல்லது பொது இடங்களிலோ அறிமுகமில்லாத நபர்களிடம் வாகன உதவிகளைப் (Lift) பெறுவதைத் தவிர்க்கவும்.
எந்தச் சூழ்நிலையிலும் அந்நியர்களால் வழங்கப்படும் உணவு அல்லது பானங்களை உட்கொள்ள வேண்டாம்.
தேவையற்ற முறையில் அறிமுகமில்லாத நபர்களையோ அல்லது குழுக்களையோ அணுக வேண்டாம்.
உங்களிடமுள்ள பணம், நகைகள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும்.
ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர், வாகனம் அல்லது குற்றச்செயல் தொடர்பான நடவடிக்கைகளை அவதானித்தால், உடனடியாக 119, 118 ஆகிய இலக்கங்கள் ஊடாக பொலிஸாரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தரிடம் முறையிடவும்.
இவ்வழிகாட்டல்களைப் பின்பற்றி புத்திசாலித்தனமாகவும் விழிப்புணர்வுடனும் செயற்படுவது மிகவும் அவசியமென இலங்கை பொலிஸ் வலியுறுத்துகிறது. இத்தகவல்களை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அயலவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் சமூக விழிப்புணர்வை வலுப்படுத்தி, இவ்வாறான குற்றங்களைத் தடுக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இந்த அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்லுமாறு ஊடக நிறுவனங்களிடம் இலங்கை பொலிஸ் கோரிக்கை விடுக்கின்றது.

phil

எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு

March 24, 2026

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக

ca

கனடாவுக்கு அனுப்புவதாக நடந்த பாரிய நிதி மோசடி

March 24, 2026

முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்,

fi

அமெரிக்காவில் நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து

March 24, 2026

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

vidu

விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில்

March 24, 2026

திமுக தலைமையிலான கூட்டணியில் பங்கு பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான தேர்தல் கூட்டணி

Death-2

தீயைக் கட்டுப்படுத்த முயன்ற விவசாயி உயிரிழப்பு

March 24, 2026

அம்பாந்தோட்டை, வீரவில – கங்கசிறிகம பகுதியில் தனது வயலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முயன்ற 63 வயதுடைய விவசாயி ஒருவர்,

gold

சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள்; தங்கத்திற்கான விலை நிர்ணயத்தில் மாற்றங்கள்!

March 24, 2026

உலகப் பொருளாதாரம் ஒரு பக்கம் தள்ளாட்டத்தில் இருக்க, மறுபக்கம் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாக

robe

மயக்க மருந்தை குளிர்சாதன இயந்திரத்தினுள் செலுத்தி கொள்ளை

March 24, 2026

திருகோணமலை, வித்தியாலய ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து செலுத்திப் பொருட்களைக்

wa

கடும் வறட்சி; குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

March 24, 2026

மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக ஹட்டனில் பகுதியில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுமென நுவரெலியா

Poli

இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்!

March 24, 2026

பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள்

AL

ஏப்ரல் 24 வரை 2026 உ/த பரீட்சைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

March 24, 2026

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம்

girl

பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டறி நப்கின்ஸ் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

March 24, 2026

பாடசாலை மாணவிகளின் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், மாணவிகளுக்கு விடாய்க்கால அணையாடை (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டும்

mali

ஐ.பி.எல் செல்ல மலிங்கவுக்கு அனுமதி

March 24, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) பங்கேற்பதற்கு இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் எஷான் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களான