இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் நுழையாதிருக்க நடவடிக்கை வேண்டும் – கடற்றொழிலாளர் இணைய ஊடக பேச்சாளர்

இலங்கை கடல் பரப்பில் கடற்படையினால் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு பலப்படுத்தினாலும் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழையாது இருக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை கடல் பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் இடம்பெற்ற தொடர்ச்சியான கைதுகளில் இதுவும் ஒன்றாக காணப்படுகின்றது.

இலங்கை கடற்பரப்பில் நுழையாதீர்கள் என எத்தனையோ தடவைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதும்,தொடர் கைதுகள் இடம்பெற்று வருகின்றது.

தமிழக மீனவர்கள் தமிழகத்தில் தொழில் செய்வதை விட இலங்கை கடற்பரப்பில் தான் தொழில் செய்கின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.

தொடர் கைதினதல் தமிழக மீனவர்கள் படுகின்ற துன்பங்களையும்,வேதனைகளையும் நாங்கள் பார்த்து வந்தாலும்,தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடு படுவதை ஏன் நிறுத்துகிறார்கள் இல்லை என்கின்ற கேள்வியும் எழுகின்றது.

இலங்கை மீனவர்கள் இலங்கை கடற்பரப்பை பயன்படுத்துவதை விட தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதே அதிகமாக காணப்படுகிறது. நாங்கள் கடற்படைக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்தாலும், இவ்வாறான கைதுகளும், அவர்களின் வருகையை தவிர்ப்பதற்கும் கடற்படையினர் கவனக்குறைவு டன் செயல் படுகின்றார்களா? என எண்ணத் தோன்றுகின்றது.

கடற்பரப்பு ஊடாக ஆட்கடத்தல்கள் குறிப்பாக போதைப்பொருள் கடத்தல்கள் இடம் பெற்று வருகின்றன.இவற்றை கட்டுப்படுத்த கடல் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளதாக அரசு கூறிக்கொண்டாலும், தொடர்ச்சியாக தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கைகளை பார்க்கின்ற போது போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் இடம் பெறுகின்றமை குறித்த கைதுகள் மூலம் தெரிய வருகிறது.

இந்திய மீனவர்கள் பல படகுகளுடன் கைது செய்யப்படும் சூழ்நிலையில்,கடத்தல் காரர்கள் குறித்த கடல் பகுதியை பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. கடற்படையின் கடல் கண்காணிப்பு நடவடிக்கை திருப்தி இல்லை என்பதே உண்மை.

எனவே இலங்கை கடல் எல்லை கண்காணிப்பை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.இலங்கை எல்லை பாதுகாப்பை பலப்படுத்துங்கள். இந்திய மீன்பிடி படகு ஒன்று கூட இலங்கை கடல் எல்லையை தாண்டி வராத வகையில் கண்காணிப்பு பலப்படுத்த வேண்டும்.

தொடர் கைதுகள் இடம் பெற வேண்டும்.இதன் ஊடாக அவர்களின் அத்து மீறிய வருகை கட்டுப்படுத்தப்பட வேண்டும். இலங்கை எல்லையை தாண்டி உள்ளே நுழையும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். அவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட வேண்டும்.

எனவே இந்திய மீனவர்கள் தயவு செய்து இலங்கை கடல் எல்லைக்குள் உள் நுழையாதீர்கள். அவ்வாறு உள் நுழைந்தால் கடற்படையினரால் கைது செய்யப்படுவீர்கள். அதை யாராலும் தடுக்க இயலாது என்றார்.

iri

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

March 6, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர்

Judment

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு

March 6, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

கிளிமடுச்சேனை விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!

March 6, 2026

புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச்

v

அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

sen

சர்வதேச படுகொலைகள் பற்றிப் பேசுகின்றோம் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி எங்கே?

March 6, 2026

செஞ்சோலையில் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்ட பெண் குழந்தைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

le

இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்வு

March 6, 2026

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான

doha

டோஹாவின் வான்பரப்பில் இஸ்ரேலின் ஏவுகணைகள் முறியடிப்பு!

March 6, 2026

கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள்

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த

Iris

ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

March 6, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208

Rohini

வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

March 6, 2026

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய

Indi

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

March 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி