இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு

இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இது தொடர்பான ஒப்பந்தம் இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டது.

இலங்கை அரசாங்கம் சார்பில் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோவும், இத்தாலி அரசாங்கம் சார்பில் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பிரதி அமைச்சரும் அரச செயலாளருமான மரியா திரிபோடியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

2021 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகியிருந்த நிலையில், அது முதல் இரு நாடுகளின் மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகாரிகளுக்கிடையில் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து இக்கையெழுத்திடல் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளிலும் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுக்கொண்ட நபர்கள் தமது செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றிக்கொள்ள வசதி அளிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் முதன்முறையாக 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டதோடு, 2021 இல் காலாவதியாவதற்கு முன்னதாக 2016 இல் புதுப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதன் மூலம், குறித்த நாடுகளில் வசிக்கும் பிரஜைகள் 6 வருட காலப்பகுதிக்குள் எழுத்துமூல மற்றும் செய்முறைப் பரீட்சைகளுக்குத் தோற்றாமல் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டுகிறது.

இந்த வசதியானது இத்தாலியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

5 வருட காலத்திற்குச் செல்லுபடியாகும் இந்த ஒப்பந்தம், இரு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 60 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும். ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததும் இரு தரப்பினரும் அது குறித்து அறிவிப்பார்கள் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

1751730278-rice-hjg-L

அனர்த்தம் ஏற்பட்டிருந்தும் கூட எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – விவசாய அமைச்சர்

December 14, 2025

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில

arre

ஹேரோயினை கடத்த முற்பட்டவர் கைது

December 14, 2025

ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாக

3 dd

டித்வா புயல் காரணமாக சுமார் 6164 வரையிலான வீடுகள் முழுமையான சேதம்

December 14, 2025

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

gun

காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

December 14, 2025

பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்

HAri

புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு!

December 14, 2025

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று பிரதமர்

Mujibar Rahuman

குழு ஒன்று முஜிபுரின் தங்கையிடம் விசாரணை: முஜிபுர் முறைப்பாடு

December 14, 2025

குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் குழு ஒன்று, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கல்கிஸையில் உள்ள

ரயிலில் யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

December 14, 2025

ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்

சிரியாவில் அமெரிக்க வீரர்கள் படுகொலை!

December 14, 2025

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும்

ஓமன் வளைகுடாவில் எரிபொருளுடன் கடத்தப்பட்ட கப்பல் ஒன்றை கைப்பற்றிய ஈரான்!

December 14, 2025

கடத்தப்பட்ட எரிபொருட்களுடன், ஓமன் வளைகுடாவில் ஒரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இந்தியா, இலங்கை

சீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடலில் விரிவடைகின்றது?

December 14, 2025

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரு கொடிய சூறாவளியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், கடல்சார் பாதுகாப்பு,

ஹமாஸின் முக்கிய தளபதி படுகொலை

December 14, 2025

காசா நகரில் ஒரு கார் மீது நடத்திய தாக்குதலின் போது ஹமாஸின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

December 14, 2025

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்