கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில், சீன நாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (23) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 26 வயதுடைய சீன நாட்டுப் பெண் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் முன்னாள் காதலனான சீன நாட்டுப் பிரஜை ஒருவரே இந்தக் கொலையைச் செய்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபரை கைது செய்வதற்காக கோஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.