இலங்கையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் வரலாற்றுச் சாதனை!

கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்து வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்று இந்த வரலாற்று சாதனைமிக்க சிகிச்சையை வழங்கியுள்ளனர்.

ஒரு குழந்தைக்கு மட்டும் இருந்த 2 சிறுநீரகங்களில் ஒன்றைப் பிரித்தெடுத்து, மற்றைய குழந்தைக்கு வெற்றிகரமாக மாற்றும் சத்திரசிகிச்சையும் இதன் போது மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான ஒரு சத்திரசிகிச்சை உலகிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணரும், பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் மாதுல ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மாவனெல்ல தாயொருவருக்கு 2021 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் இந்த இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அதற்கமைய சிறுநீரகங்களின் செயற்பாடு சீரானது.

இந்த நிலையை அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 10 ஆம் திகதி இவர்கள் பிரித்தெடுக்கும் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

சத்திரசிகிச்சைக்காக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நீண்ட நேரம் குழந்தைகள் மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். குழந்தைகளின் இதயம், நுரையீரல், இரத்த ஓட்டம் மற்றும் மூளை ஆகியவற்றின் சீரான செயற்பாடே இந்த வெற்றிகரமான சத்திரசிகிச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக மயக்க மருந்து நிபுணர் அஷானி ரத்நாயக்க, குறிப்பிட்டார்.

சத்திரசிகிச்சையின் பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இந்த குழந்தைகள், அடுத்த சில நாட்களில் சாதாரண விடுதிக்கு மாற்றப்படவுள்ளனர்.

இடுப்பு பகுதியில் இணைந்திருந்த குழந்தைகளை பிரிக்கும் சத்திர சிகிச்சை இலங்கையில் இதுவரை ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலையில், ஒரு குழந்தையிலிருந்து சிறுநீரகத்தைப் பெற்று மற்றைய குழந்தைக்கு பொருத்தி அவர்களைப் பிரிக்கும் இத்தகைய சத்திரசிகிச்சை உலகிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குழந்தைகளின் உடல் எடை அறுவை சிகிச்சைக்கு ஏதுவான நிலையை அடையும் வரை சுமார் 5 ஆண்டுகள் காத்திருந்த பின்னரே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குழந்தைகளின் இடுப்புப் பகுதியில் அசாதாரணமான அமைப்பு காணப்பட்டுள்ளது. கால்கள் குறுக்காக அமைந்திருந்தது. தலைக்கு ஒப்பான நிலையில் கால்கள் 90 பாகை கோணத்தில் அமைந்திருந்ததால், கால்களுக்குச் செல்லும் நரம்புகள் மற்றும் இரத்த ஓட்டத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குழந்தைகளைப் பிரித்தெடுப்பது பெரும் சவாலாக அமைந்ததாக சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையின் எலும்பு சிகிச்சை நிபுணர் வைத்தியர் அகலங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தச் சத்திரசிகிச்சைக்காக 15 விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

குழந்தைகள் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், எதிர்காலத்தில் அவர்களுக்கு மேலும் சில சத்திரசிகிச்சைகள் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் வைத்தியர் மாதுல ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த

den

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

July 27, 2026

இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய​ை வலுப்படுத்தும்

sajith-2

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் விவசாயிகளினாலேயே வீடு செல்லும்

July 27, 2026

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம், விவசாயிகளினாலேயே வீடு செல்லும் காலம் வரக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம்

arrest

பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

July 27, 2026

இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது