பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ (ஆலைழn டுநந) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பிலும், இலங்கையின் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கல்வித் துறையின் டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டியில் அமைக்கப்படவுள்ள புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியியல் கல்லூரியை அபிவிருத்தி செய்தல் தொடர்பிலும் தொழிற்கல்வி தொடர்பான பாடங்களை தேசிய பாடத்திட்டத்தில் ஒருங்கிணைத்தல் தொடர்பிலும் தொழில்சார் துறைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விசேட ஆசிரியர் பயிற்சிகளை வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் கல்வித் துறையை விரிவுபடுத்துவதற்கு தென்கொரிய அரசு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.