இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்குகிறது அமெரிக்கா!

டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்வதற்கான மனிதாபிமான உதவியாக இன்னும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று செவ்வாய்க்கிழமை (13) அறிவித்தது.

இதன் மூலம் டிட்வா சூறாவளி நிவாரணத்திற்காக அமெரிக்கா வழங்கிய மொத்த உதவிகளின் பெறுமதி 4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சூறாவளி கரையைக் கடந்து 72 மணித்தியாலங்களிற்குள் அமெரிக்கா அறிவித்த 2 மில்லியன் அமெரிக்க டொலர்களின் தொடர்ச்சியாக இப்புதிய நிதியுதவி அமைகிறது.

இப்பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மிகச்சரியான நேரத்தில், செயற்திறனுடைய உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டினை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

“இலங்கையர்களுக்கு உதவி தேவைப்பட்டபோது அமெரிக்கா உதவி செய்தது.” என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். “போர்த் திணைக்களம் வழங்கிய வான் போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல் நிபுணத்துவங்கள் முதல் மனிதாபிமான உதவியாக வழங்கப்பட்ட 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஒரு முக்கியமான இந்தோ-பசிபிக் பங்காளரான இலங்கை, டிட்வா சூறாவளியின் தாக்கங்களிலிருந்து மீட்சியடைந்து முன்னோக்கிச் செல்வதற்கு நாங்கள் உதவி செய்கிறோம்.

இது போன்ற பேரனர்த்தங்கள் சமூகங்களையும் வாழ்வாதாரங்களையும் சீர்குலைக்கின்றன. மக்களும் பொருளாதாரங்களும் முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான ஸ்திரத்தன்மைக்குப் பங்களிப்புச் செய்வதில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை, பதுளை, கம்பஹா, கேகாலை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட இலங்கையின் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் மற்றும் மத்திய மாகாணத்திலுள்ள தோட்டப்புறங்களில் (எஸ்டேட்களில்) வாழும் சமூகங்களிலும் மேற்கொள்ளப்படும் நிவாரண மற்றும் ஆரம்பகால மீட்புப் பணிகளுக்கு அமெரிக்க உதவிகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவசர உணவு மற்றும் சமையலறை உபகரணங்கள் மற்றும் சுகாதாரப் பாவனைப் பொருட்களை உள்ளடக்கிய பொதிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மணல் மூட்டைகளை அமைப்பதற்கான சாக்குப்பைகள் போன்ற வெள்ளத்தைத் தணிப்பதற்கான பொருட்கள் என்பன இவ்வுதவிகளுள் உள்ளடங்குகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் சுத்தமான குடிநீரை அணுகுவதற்கும், தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்தினை வழங்குவதற்கும், மற்றும் தங்குமிடங்களில் பாதுகாப்பான மற்றும் குழந்தைகள் தங்குவதற்கு உகந்த இடங்கள் இருப்பதை உறுதி செய்வதற்கும் இவ்வுதவிகள் பங்களிப்புச் செய்கின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மற்றும் தோட்டப்புறப் (எஸ்டேட்) பகுதிகளில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதன் மூலமும், வடிகாலமைப்பு வசதிகள் மற்றும் சிறிய அளவிலான நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும், குடும்பங்கள் உள்ளூர் உணவுற்பத்தி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கும் வண்ணம் வாழ்வாதார உதவிகளை வழங்குவதன் மூலமும் சமூகங்கள் இப்பேரனர்த்தத்தின் பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கு அமெரிக்கா வழங்கும் உதவிகள் பங்களிப்புச் செய்கின்றன.

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவிகள் விரைவாகவும், செயற்திறனுடனும், கணக்குக்காட்டும் பொறுப்புடனும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் வேர்ல்ட் விஷன் போன்ற நம்பகமான அமைப்புகள் அமெரிக்காவின் உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.

டிட்வா சூறாவளியினைத் தொடர்ந்து உருவாகி வரும் தேவைகளை இலங்கை தொடர்ந்து மதிப்பீடு செய்கையில், உருவாகி வரும் முன்னுரிமைகளுக்கு உதவி செய்வதற்கான வழிகளை ஆராய்வதற்காக இலங்கை அதிகாரிகளுடன் அமெரிக்கா நெருக்கமாக இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து