இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகச் சீனப் பிரதமர் உறுதி

மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங் (Li Qiang) உடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் பல்வகைப்பட்ட ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இலங்கை, சீனாவின் ‘ஒரு சீனா கொள்கைக்கு’ (One China Principle) ஒத்துழைப்பை வழங்குவதாகவும், ஸிஸாங் (Xizang) மற்றும் சின்ஜியாங் (Xinjiang) தொடர்பான விவகாரங்களில் சீனாவுக்குத் திடமான ஆதரவை வழங்குவதாகவும் பிரதமர் கலாநிதி அமரசூரிய மீண்டும் உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலின்போது, பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தமைக்காகச் சீன அரசாங்கத்திற்கு இலங்கையின் பாராட்டைத் தெரிவித்த பிரதமர், மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாலின சமத்துவத்திற்கான ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் முன்மொழிவுகளையும் வலியுறுத்தினார்.

உலகப் பொருளாதாரம், புத்தாக்கம், வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றில் சீனாவின் குறிப்பிடத்தக்க பங்கைப் பாராட்டிய பிரதமர், இலங்கையின் “வளமான தேசம் – அழகான வாழ்க்கை” (A Thriving Nation – A Beautiful Life) என்ற தொலைநோக்கு பார்வையை எடுத்துரைத்தார்.

வறுமையை ஒழித்தல், நிலையான அபிவிருத்தி, டிஜிட்டல் மயமாக்கல் (Digital Transformation), மற்றும் 2025 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட Clean Sri Lanka திட்டம் உள்ளிட்ட செயல்திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகிய இலங்கையின் தேசிய முன்னுரிமைகளைச் சீனப் பிரதமர் லீ சியாங் அங்கீகரித்தார்.

இக்கலந்துரையாடலின் போது, கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் அண்மையில் எட்டப்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பிராந்திய உறவுகளைப் பலப்படுத்தி, நிலையான சமூக-பொருளாதார அபிவிருத்திக்காக, Belt and Road முன்முயற்சியின் கீழ் மேலும் ஒத்துழைப்பை வரவேற்றதோடு, இலங்கையின் ஒரு முக்கிய அபிவிருத்திப் பங்காளராகச் சீனாவின் பங்கை எடுத்துரைத்தார்.

உயர்ந்த தரத்திலான Belt and Road முன்முயற்சியின் கீழ் சீன அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் முக்கிய திட்டங்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவைப் பெற்றுத் தருவதாகச் சீனப் பிரதமர் லீ சியாங் உறுதி அளித்தார்.

பெண்களின் உரிமைகள் மற்றும் பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர், பீஜிங் பிரகடனத்தின் தொடர்ச்சியான ஆதரவை ஒரு செயல்பாட்டுத் தளமாக வெளிப்படுத்தினார். அத்துடன், பெண்களின் தலைமைத்துவம், அதிகாரமளித்தல், சம வாய்ப்பு மற்றும் வன்முறையில் இருந்து பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான தேசிய முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு