இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்றது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதராக தனது இராஜதந்திர சேவையை முடித்துக்கொண்டு எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளார்.
இச் சந்திப்பின் போது ஜூலி சங், அவரது பதவிக் காலத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்புவதற்கு மற்றும் வலுப்படுத்துவதற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.