விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி இரட்டைவாய்க்கால் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது
முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை ஒன்று நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை வீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியுடன் குறித்த அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கனரக இயந்திரம்கொண்டு குறித்த பகுதி 15 அடிக்கு மேல் தோண்டியும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணியினை கைவிட்டுள்ளார்கள்.