இன்று புனித நோன்புப் பெருநாள்

இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (21) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவாசிகள் இரண்டு நாட்கள் விளையாட்டில் ஈடுபட்டனர். ‘ஏன் இப்படிச் செய்கிறார்கள்?’ என்று நபியவர்கள் கேட்டபோது, அம்மக்கள், ‘நாங்கள் அறியாமைக் காலத்தில் இந்த இரண்டு நாட்களையும் பண்டிகை நாள் போல் விளையாடுவோம்’ என்று கூறினர். அதற்கு நபியவர்கள், ‘இவ்விரண்டு நாட்களுக்குப் பகரமாக உங்களுக்கு அவற்றை விடச் சிறப்பான இரண்டு நாட்களை இறைவன் தந்துள்ளான். அவை ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாள், ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள்’ என்று கூறினார்கள்.

மேற்கண்ட நபி மொழியில் வந்துள்ளது போன்று இஸ்லாத்தில் இரண்டு பெருநாள்கள் மட்டுமே உண்டு. நோன்புப் பெருநாள் புனித ரமழான் மாத நோன்பு நோற்ற பின்பும் ஹஜ்ஜுப் பெருநாள் மற்றொரு கடமையான ஹஜ்ஜின் போதும் கொண்டாடப்படுகின்றன. ரமழான் மாதத்தில் நாம் நோற்ற நோன்புகளில் ஏற்பட்ட குறைகளை நீக்குவதற்காகவும் பெருநாள் அன்று ஏழைகளும் மகிழ்ச்சியோடு நோன்புப் பெரு நாளைக் கொண்டாடவும் ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தின் இறுதிநாள் சூரியன் மறைந்தவுடன் நோன்புப் பெருநாள் தர்மம் கொடுப்பது கடமையாகிறது. இதை பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் கொடுத்துவிட வேண்டும். அதற்குப் பின்பு கொடுத்தால் அது சாதாரண தர்மமாகவே கருதப்படும். பெருநாளுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பும் கொடுக்கலாம். (நோன்புப்) பெருநாள் அன்று காலையில் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என ஒற்றைப் படையாகப் பேரீச்சம் பழங்களை உண்பது நபி வழியாகும்.

தொழும் இடத்திற்கு நடந்து செல்வதும் நபி வழி ஆகும். ஆண்கள் நல்ல ஆடைகள் அணிந்து, நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும். தொழும் திடலுக்கு ஒருவழியில் சென்று வேறுவழியில் திரும்புவதும் நபி வழிதான். ஆண்களும் பெண்களும் குளித்து சுத்தமாகி அதிகாலையிலேயே தொழும் இடம் செல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று ஒருவழியில் சென்று மறுவழியில் திரும்பி வருவார்கள் என நபித் தோழர் ஜாபீர் (ரழி) அறிவிக்கிறார்கள்.

பெருநாள் மகிழ்ச்சிக்குரிய நாளாகும். நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றுவதற்கும் அந்த மாதத்தில் அதிகமதிமாக பிரார்த்தனைகளை, தொழுகைகளை நிறைவேற்றவும் அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். எனவே, அன்று மார்க்கம் அனுமதிக்கும் வகையில் மகிழ்ச்சியை நாம் வெளிப்படுத்த வேண்டும்.

குடி, கும்மாளம், டான்ஸ், தவறான வீடியோக்கள், சினிமா போன்ற மார்க்கம் தடை செய்துள்ள வழிகளில் அந்த நாளைக் கழிக்கலாகாது. மாறாக சொந்த பந்தங்கள், நண்பர்கள், அண்டை வீட்டினரைச் சென்று சந்தித்து வாழ்த்து கூறுதல், நோயாளிகள் இருந்தால் அவர்களைச் சந்திக்கச் செல்லுதல் போன்ற நல்லறங்களில் ஈடுபடலாம். மார்க்கம் அனுமதிக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.

பெருநாட்களின் முக்கியமான நோக்கம் ஏகத்துவத்தை நிலைநிறுத்துவதாகும். அதனால்தான் பெருநாள் அன்று புத்தாடை உடுத்தி ‘இறைவன் மிகப் பெரியவன், இறைவன் மிகப் பெரியவன்’ (அல்லாஹு அக்பர்) என்று சொல்கிறோம். மேலும் தொழுகையில் ‘உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’ என்று கூறுகிறோம்.

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல் இரண்டாவது பயனாகும். நாம் பெருநாள் கொண்டாடுவதே அவர்கள் கூறிய வழிமுறைப்படி தான். எனவே அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் முஹம்மது இறைவனின் தூதர் என்னும் கலிமாவின் பொருளை உண்மைப்படுத்துகிறோம்.

மூன்றாவது பயன் நோன்புப் பெருநாள் தர்மம் வழங்குவது, அதனால் ஏழைகளும் அன்று மகிழ்வாகப் பெருநாள் கொண்டாட வழியேற்படுகிறது. சமுதாய ஒற்றுமை, மக்கள் நலனில் அக்கறை போன்ற பயன்களும் இதனால் ஏற்படுகின்றன. ஏழை, செல்வந்தன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என அனைவரும் ஓரிடத்தில சமமாக ஒன்று கூடுவதாலும் ஒருவரையொருவர் ஸலாம் கூறி வாழ்த்துவதாலும் அன்பும் சகோதரத்துவமும் பரிணமிக்கின்றன.

இறைத் தூதர் (ஸல்) கூறினார்கள். ‘என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாதவரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாய் ஆக முடியாது. ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாம் கூறுவதைப் பரவலாக்குங்கள்’.

பெருநாளின் போது சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தப்படும். அதன் மூலம் பெற்றோர்களைப் பேணுதல், உறவினருடன் சேர்ந்து வாழுதல், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருத்தல், அண்டை வீட்டாரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை, பெண்களுக்குத் தேவையான கணவன் – மனைவி உரிமைகளும் கடமைகளும் இறைவனுக்கு இணை வைத்தலின் தீங்குகள், மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும் அநாச்சாரங்கள், அவற்றின் தீங்குகள், மார்க்கம் தடை செய்துள்ள மது, விபச்சாரம், கொலை, திருட்டு, வட்டி, லஞ்சம், புறம்பேசுதல், கோள் சொல்லுதல், அவதூறு கூறுதல் போன்ற பல விஷயங்களின் தீங்குகள், அவற்றுக்குக் கிடைக்கும் இவ்வுலக மறுவுலகத் தண்டனைகள் குறித்து சொல்லப்படுவதால் மக்களுக்கு அவர்களது மார்க்கம் பற்றிய தெளிவு கிடைக்கிறது. இன்னும் இது போன்ற இறை நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் காரியங்களும் இறை நம்பிக்கைக்கு வலுவூட்டும் பல பயன்களும் உள்ளன.

Iran

எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்கிய அமெரிக்கா!

March 21, 2026

அமெரிக்க – இஸ்ரேலிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக, கடலில் உள்ள ஈரானிய எண்ணெயைக் கொள்முதல்

Coll

பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை?

March 21, 2026

இன்றும் (21) நாளையும் (22) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்றைய தினம்

Police_1

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை

March 21, 2026

பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது

Donal

எமக்கு ஆதரவு தராத நேட்டோ நாடுகள்‘கோழைகள்’ – டொனல்ட் ட்ரம்ப்

March 21, 2026

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு தராத நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது

Eid

இன்று புனித நோன்புப் பெருநாள்

March 21, 2026

இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (21) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா

ri+

ரியாத் நகரில் மேலும் ஓர் இந்தியர் உயிரிழப்பு

March 21, 2026

சவூதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் ஈரான் தாக்​குதலில் இந்​தி​யர் ஒரு​வர் உயி​ரிழந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா – ஈரான் போரில்

ir

உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் – ஈரான்

March 21, 2026

உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளதுடன், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரித்து வருவதாகவும்

crim

யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை!

March 21, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

har

பிரதமர் ஹரிணி அமரசூரிய அவசர அறிவிப்பு!

March 21, 2026

கடந்த அரசாங்க காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமர

hie

வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டிக்கு 800 பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்ப சாட் அரசு முடிவு!

March 21, 2026

ஆபிரிக்க நாடான சாட் (Chad), வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி (Haiti) நாட்டிற்கு 800 பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக

ravika

வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை – ரவிகரன்

March 21, 2026

கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் மகாவலி அதிகார சபை வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி என்னும் பெயரில்

his

ஹிஸ்புல்லா நிதியுதவியுடன் செயல்பட்ட பயங்கரவாத கும்பல் கைது

March 21, 2026

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தேசிய பாதுகாப்பு அமைப்பினர், ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பால் நிதியுதவி அளிக்கப்பட்டு இயங்கி