இந்த ஆண்டில் வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கப்படுமா?

மே மாதத்தில் மேற்கொண்ட பெரிய மற்றும் எதிர்பாராத வட்டி விகித அதிகரிப்பிற்குப் பின்னர், இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கி கருதுவதாக மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கை வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கம் தற்போதைய மட்டங்களிலேயே உச்சத்தை எட்டி, அடுத்த ஆண்டில் 5 சதவீத இலக்கை நோக்கி மீண்டும் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போரினால் தூண்டப்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தனது முதல் அதிகரிப்பாக கடந்த மே மாதத்தில் 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி உயர்வைக் கொண்டுவந்து மத்திய வங்கி சந்தைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த நடவடிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இடம்பெறும் மீட்சியில் அதன் அறிவுறுத்தலில் தெரிவு செய்யப்பட்ட ஆபத்தான வழிமுறையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பணவீக்கம் 7 சதவீதமாக உயரும் என மத்திய வங்கி எதிர்பார்த்ததால், மே மாத வட்டி உயர்வு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது என்றும், தற்போதைய பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்ட பாதையிலேயே உள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கூறினார்.

நாங்கள் எதிர்பார்த்ததிலிருந்து ஏதேனும் விலகல்கள் இருக்கிறதா என்பதை நாங்கள் கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

எதிர்காலத்தில் நிதியியல் கொள்கையை இறுக்குவது அல்லது தளர்த்துவது பற்றிய எந்தவொரு முடிவும், ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட வேறுபட்ட பாதை உருவாகிறதா என்பதன் அடிப்படையிலேயே அமையும்.

இதுவரை அப்படி எதுவும் நாங்கள் காணவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள் காரணமாக, இலங்கையின் முக்கிய பணவீக்கச் சுட்டெண் ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாகப் பதிவாகியதுடன், இது கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய அதிகரிப்பாகும்.

நவம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் 8 சதவீதமாக உயரும் என சில ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மே மாத வட்டி அதிகரிப்பின் முழுமையான தாக்கம் பொருளாதாரத்தில் வெளிப்பட 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்றும், அடுத்த ஆண்டின் முதலரை பகுதியில் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கிற்கு மீண்டும் திரும்பும் வாய்ப்புள்ளதாகவும் ஆளுநர் வீரசிங்க கூறினார்.

பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காமல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் ஆளுநர் வீரசிங்கவின் இந்த சமீபத்திய கருத்துக்கள், மத்திய வங்கி அதன் நிதியியல் கொள்கையை குறைந்தது ஆண்டின் எஞ்சிய பகுதி வரை 8.75 சதவீதத்திலேயே நிலையாக வைத்திருக்கத் தயாராக இருப்பதை உணர்த்துகின்றன.

மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித அறிவிப்பு செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போர் காரணமாக முக்கிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோக வழிகள் தடைப்பட்டு, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்ததால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கணக்குகளில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக, அரசாங்கம் எரிபொருள் விலைகளை 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதுடன், ரேஷன் முறையை அறிமுகப்படுத்தி, புதன்கிழமைகளைப் பொது விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,