இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ‘பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்’ விருது பெற்றார்.
இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 14. பீஹாரை சேர்ந்த இவர், அதிரடியாக ரன் சேர்ப்பதில் வல்லவர். மின்னல் வேக சதங்களாக விளாசுகிறார். இந்த ஆண்டு பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 35 பந்தில் சதம் (எதிர் குஜராத்) விளாசினார். 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் (4 நாள்) ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 58 பந்தில் சதம் அடித்தார். கத்தாரில் நடந்த ‘ரைசிங் ஸ்டார்’ ஆசிய கோப்பை தொடரில் இந்திய ‘ஏ’ அணிக்காக 42 பந்தில் 144 ரன் (எதிர், யு.ஏ.இ.,) எடுத்தார். சையது முஷ்டாக் அலி உள்ளூர் ‘டி-20’ தொடரில் 61 பந்தில் 108 ரன் (எதிர், மஹாராஷ்டிரா) எடுத்தார்.