சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அடுத்ததாக நமீபியாவுக்கெதிராக வியாழக்கிழமை (12) நடைபெறவுள்ள போட்டி இடம்பெறும் டெல்லியில் குழாமுடன் வொஷிங்டன் சுந்தர் இணைந்து கொள்வாரென இந்திய அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் தோட்பட்டைக்கும், இடுப்புக்குமிடையிலான பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டிகளில் சுந்தர் பங்கேற்றிருக்கவில்லை.