இடர் நெருக்கடியை கருத்தில் கொள்ளாமல் இந்திய மீனவர்கள் எமது கடற்பகுதிக்குள் அத்துமீறுவது நியாயமில்லை

வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளாமல் எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி எங்கள் கடல் வளங்களை அள்ளிச் செல்கிறார்கள். இது நியாயமற்றது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த எமது மீனவர்களும் அமைச்சும் இணைந்த விசேட ‘ஒப்பரேஷன்’ ஒன்று முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் அதில் மேலும் கூறுகையில்,

நாட்டில் ஒரு பெரும் வெள்ள அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. இந்த அனர்த்தத்தால் எமது மீனவர்களும் மோசமாக பாதிக்கப்பட்டிருகின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா ஒரு புறம் மனிதாபிமான உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கின்றது. அது எமக்கு ஆறுதலைத் தருகிறது.

ஆனால் மறுபுறத்தில் இடர் நிலைமையையும் கவனத்தில் கொள்ளாது இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக எமது கடற்பரப்புக்குள் பிரவேசித்து எமது கடல் வளங்களைச் சூறையாடிச் செல்கின்றார்கள். இது நியாயமான ஒரு செயற்பாடு அல்ல.

இது குறித்து நாங்கள் பல தடவைகள் பல தரப்புக்களுடனும் பேசிவிட்டோம். ஆனால் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக இல்லை. மாறாக, இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துக்கொண்டே போகிறது.

தொப்புள்கொடி உறவுகள் என்கிறார்கள். ஆனால், அந்த தொப்புள்கொடி உறவுகளின் வளங்களை அள்ளிச் செல்வது சரியானதா? தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடந்து, எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்தி எமது கடல் வளம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுடன் பேசவேண்டும்.

இவ்வாறு இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடரும் பட்சத்தில் அதனைத் தடுப்பதற்கு எமது மீனவர்களும் அமைச்சும் இணைந்து ‘விசேட ஒப்பரேஷன்’ ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

9

அன்பில் மகேஸ் ஊழல் செய்யவில்லை என தைரியமாக கூறுவாரா? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

June 25, 2026

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக-வின்

8

சோதனை காலம் முடிந்தது; வசந்தகாலம் வரப்போகிறது! – வைகோ பேச்சு

June 25, 2026

சென்னை: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகிகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் வைகோ, கட்சியின் அடுத்தக்கட்ட

sana

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் – சாணக்கியன்

June 25, 2026

செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும். இன்னும் எத்தனை

Sajith-Premadasa-2 (1)

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சிங்கப்பூர் பாணி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ

June 25, 2026

நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகப் பாரபட்சமின்றி சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனைச் சட்டங்களை (Singapore-style punishments) அரசாங்கம்

6

உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!! – ஜெயக்குமார் விமர்சனம்

June 25, 2026

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்விற்காக வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டும் அறிவித்திருப்பது, அரசுப்

default (37)

கனடா முன்பள்ளியில் சிறுவர்கள் மீது கொடூரம்: தலைமுடியை இழுத்து, கழிவறைக்குள் பூட்டி சித்திரவதை செய்த ஆசிரியை!

June 25, 2026

டொர்பே, கனடா (CBC News): கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மாகாணத்தில் உள்ள ‘டொர்பே’ (Torbay) நகரின் ‘ஒய்.எம்.சி.ஏ’ (YMCA) முன்பள்ளியில் (Pre-kindergarten

728370208_1320477406895994_2924890339714314159_n

கனடா: சர்ரே மிரட்டிப் பணம் பறிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு விவகாரம்! இரு வெளிநாட்டுப் பிரஜைகள் மீது அதிரடியாகப் புதிய குற்றச்சாட்டுகள் பதிவு

June 25, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில், மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்

5

விஜய், உதயநிதி இரண்டு பேருடைய கருத்தும் தவறுதான் – சிபிஎம் சண்முகம்!

June 25, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

sivakantha

இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில் மலையக இளைஞன் சிவகாந்தன்

June 25, 2026

லங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில், கம்பஹா, உடப்புஸ்ஸல்லாவ கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தன் இணைந்துகொண்டு, மலையக மண்ணுக்குப்

aya4

ஜூலையில் ஈரானின் மறைந்த உயர் தலைவர் அலி காமேனியின் இறுதிச்சடங்கு!

June 25, 2026

ஈரானின் மறைந்த முன்னாள் உயர் தலைவர் அலி காமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான்

ja

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு பூட்டு

June 25, 2026

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்று, சுகாதார அதிகாரிகளின் திடீர் சோதனையைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை

prem

அரசாங்க திறைசேரியின் 2.5மில்லியன் டொலர் மோசடியின் பின்னணியில் அரச ஆதரவாளர்

June 25, 2026

அரசாங்க திறைசேரியில் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் டொலர், அரசாங்க ஆதரவாளர் ஒருவரின் அவுஸ்திரேலிய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக