இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் தோற்றது.
லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றதோடு, வொல்வ்ஸ் சார்பாக றொட்றிகோ கோமெஸ், அன்ட்ரே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 64 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 59 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி உள்ளது. மன்செஸ்டர் யுனைட்டெட், அஸ்தன் வில்லா ஆகியன தலா 51 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம், நான்காமிடங்களிலுள்ளன.