இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில், செல்சியின் மைதானத்தில் இன்று நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
ஆர்சனல் சார்பாக பென் வைட், விக்டர் ஜையோகெரெஸ், மார்டின் ஸுபிமென்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செல்சி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ பெற்றிருந்தார்.