வடக்கு ஆசிரிய இட மாற்றத்தில் மோசடி அரசியல் தலையீடு.. இரத்து செயாவிட்டால் தொடர் போராட்டம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் எச்சரிக்கை.
வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாக கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் செவ்வாய்கிறமை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் ஆசிரியர்கள் பழிவாங்கலால் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டினர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விடையம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடுவதாக பதில் வழங்கினர்.