ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதலுக்கு எல்லையில் தலிபான் படை பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் உயிரிழப்பு

ஆப்​கானிஸ்​தான் மற்​றும் பாகிஸ்​தான் படை​யினருக்கு இடையே எல்​லை​யில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற மோதலில் பாக். வீரர்​கள் 58 பேர் உயி​ரிழந்​த​தாக தலி​பான் அரசின் செய்தித் தொடர்​பாளர் நேற்று அறி​வித்​தார்.

ஆப்​கன் தலைநகர் காபூல் மற்​றும் கிழக்கு பகு​தி​யில் உள்ள சந்தை ஆகிய​வற்​றில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது. ஆனால் இந்த தாக்​குதலுக்கு பாகிஸ்​தான் பொறுப்​பேற்​க​வில்​லை.

பாகிஸ்​தானில் செயல்​படும் தெக்​ரிக் இ-தலி​பான்​களுக்கு (டிடிபி) ஆப்​கானிஸ்​தானில் அடைக்​கலம் கொடுப்​ப​தை​யும், ஆயுதப் பயிற்சி அளிப்​ப​தை​யும் தலி​பான் அரசு நிறுத்தி கொள்ள வேண்​டும் என்று மட்​டும் பாகிஸ்​தான் அறிக்கை வெளி​யிட்​டது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் தெக்​ரிக் இ-தலி​பான்​கள் நடத்​திய தாக்​குதலில் பாகிஸ்​தான் வீரர்​கள் நூற்​றுக்​கணக்​கானோர் உயி​ரிழந்​தனர் என பாகிஸ்​தான் குற்றம் சாட்​டியது.

இந்​நிலை​யில் பாகிஸ்​தான் தாக்​குதலுக்கு பழி​வாங்​கும் நடவடிக்​கை​யாக, பாகிஸ்​தான் எல்லை மீது ஆப்​கன் படை​யினர் நேற்று முன்​தினம் இரவு தாக்​குதல் நடத்​தினர்.

பஹ்ரம்சா மாவட்​டத்​தின் துரந்த் எல்​லை​யில் இந்த தாக்​குதல் நடை​பெற்​ற​தாக​வும், அப்​போது பாகிஸ்​தான் ராணுவத்​தின் 3 நிலைகளை ஆப்​கன் படை​யினர் கைப்​பற்​றிய​தாக​வும் ஆப்​கானிஸ்​தானின் ஹெல்​மாண்ட் பகுதி செய்தித் தொடர்​பாளர் மவுலி முகமது காசிம் ரியாஸ் தெரி​வித்​தார்.

இதுகுறித்து ஆப்​கானிஸ்​தானின் தலி​பான் அரசு செய்தி தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாகித் கூறுகை​யில், ‘‘ஆப்​கன் மற்​றும் பாகிஸ்​தான் படை​யினர் இடையே நடை​பெற்ற சண்​டை​யில் பாக். வீரர்​கள் 58 பேர் உயி​ரிழந்​தனர். ஆப்​கன் தரப்​பில் 9 வீரர்​கள் உயி​ரிழந்​தனர், 16 பேர் காயம் அடைந்​தனர்’’ என்​றார்.

எச்சரிக்கை: ஆப்கன் அமைச்சர் அமிர் கான் முட்டாகி டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தான் எல்லையில் சுமார் 4 மணி நேரம் ஆப்கன் படைகள் நடத்திய பதிலடி தாக்குதல் மூலம் எங்கள் நோக்கம் நிறைவேறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிலர் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். பாகிஸ்தான் மக்களும், பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் ஆப்கானிஸ்தானுடன் அமைதியான உறவை விரும்புகின்றனர். அதை அங்குள்ள சிலர் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.

கத்தாரும், சவுதி அரேபியாவும் கேட்டுக் கொண்டதால், நாங்கள் தாக்குதலை நிறுத்தினோம். அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். பாகிஸ்தானுடன் அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தால், எங்களுக்கு வேறு வழிகள் உள்ளன. இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது