அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காக ஐந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து 26ஆவது முறையாக நடத்தும் ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா கல்கிஸை, மவுன்ட்லிவினியா ஹோட்டலில் நாளை செவ்வாய்க்கிழமை ( 20) ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காக ஐந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

உபாலி தென்னகோன் (Upali Tennakoon)

உபாலி தென்னகோன் 1970களில் பாடசாலை மாணவராக இருந்தபோதே பத்திரிகைகளுக்கு கட்டுரைகள். சிறப்பு அம்சங்கள் மற்றும் செய்திகளை எழுதத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டில் அவர் ‘தினமின’ பத்திரிகையில் சுதந்திர ஊடகவியலாளராகவும் பின் பத்திரிகைத்துறையில் செய்திப்பிரிவு ஊடகவியலாளராகவும் சேர்ந்தார். பின்னர் சிலுமின மற்றும் தருணி உட்பட பல லேக் ஹவுஸ் வெளியீடுகளில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். செப்டம்பர் 1981 இல், உபாலி நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட்டின் திவயின பத்திரிகையில் அதன் நிறுவுனர் குழு உறுப்பினராக சேர்ந்தார். பின்னர் அவர் மாகாண செய்தி ஆசிரியர் செய்தி ஆசிரியர், துணை ஆசிரியர் மற்றும் இணை ஆசிரியர் போன்ற பல்வேறு பதவிகளில் பணியாற்றியதுடன் 1994 இல் ‘திவயின’வின் பதிப்பாசிரியராக நியமிக்கப்பட்டார்

புஷ்பா இலங்கந்திலேக்க (Pushpa Ilangantilleke)

புஷ்பா இலங்கந்திலேக்க 45 ஆண்டுகளுக்கும் மேலான ஊடகத்துறை அனுபவத்தை கொண்டவராவார். 1981ஆம் ஆண்டு, லேக் ஹவுஸ் நிறுவனத்தில் சுயாதீன எழுத்தாளராக தனது ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார். 1982ஆம் ஆண்டு, திவயின பத்திரிகையில் இணைந்து கொண்ட அவர் 2010ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகள் உபாலி பத்திரிகை நிறுவனத்தில் உதவி ஆசிரியர், துணைப் பிரதம ஆசிரியர், ஆசிரியர் எனப் பல பதவிகளை வகித்தார். 2011 முதல் ஐந்து ஆண்டுகள் ‘ரிவிர’ தினசரி பத்திரிகையின் சிறப்பு கட்டுரை ஆசிரியராக பணியாற்றினார். 2017 முதல் ஐந்து ஆண்டுகள் ‘லங்காதீப (ஞாயிறு)’பத்திரிகையில் துணை ஆசிரியரும் சிறப்பு கட்டுரையாளராகவும் அதன் பின்னர் 2024 முதல் ஒன்றரை ஆண்டுகள் மொனரா (ஞாயிறு)’ பத்திரிகையில் சிறப்பு கட்டுரையாளராகவும் பங்களித்தார்.

இரா அ.இராமன் (R. A. E. Raman)

கண்டி பூரணவத்தையில் 1942ஆம் ஆண்டு பிறந்த இரா.அ இராமன், இலங்கைத் தமிழ் இலக்கியம் ஊடகம் மற்றும் பண்பாட்டுத் துறையில் முக்கிய பங்களிப்பு செய்துள்ள எழுத்தாளர், ஊடகவியலாளர் மற்றும் செயற்பாட்டாளராவார். குறிஞ்சித்தேனி மற்றும் பூரணவத்தை காகுத்தன் என்ற புனைப்பெயர்களில்

குறிப்பாக மலையகப் பகுதிகளில் தமிழ் மொழி மற்றும் அறியப்படும் அவர், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்.

தினக்குரல் பத்திரிகையின் கண்டிக்கிளை முகாமையாளராக 18 ஆண்டுகள் கடமையாற்றி 2018ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஊடக மற்றும் இலக்கியச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவராக செயற்படும் அவர், முன்னதாக கண்டித் தமிழ் சங்கத்தின் செயலாளர் மற்றும் கைலாசபதி ஆய்வு மையத்தின் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார். இலக்கிய உலகில் இவர்கள் மற்றும் இது கதையல்ல நிஜம் ஆகிய நூல்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். அம்மா, பூரணம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், கண்டி இலக்கியச் செய்திமடல், இனி போன்ற இலக்கிய செய்தி பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவரது இலக்கியச் சேவைகளுக்காக மாகாண மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பு நெலும் பொக்குன மண்ட பத்தில் நடைபெற்ற தேசிய விழாவில் கௌரவிக்கப்பட்ட 100 கலைஞர்களில் ஒருவராகவும் அவர் இடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிக் தௌஃபிக் (Sa’adi Thawfeeq)

சாதிக தௌஃபீக இலங்கையின் விளை யாட்டு ஊடகவியலாளரும் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட சிரேஷ்ட கிரிக்கெட் எழுத்தாளருமாவார். 1976ஆம் ஆண்டில் தனது விளை யாட்டு ஊடகவியல் பயணத்தை ஆரம்பித்த அவர், எதிர்வரும் மார்ச் மாதத்தில் விளையாட்டு ஊடகவியலில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

1976-2006 வரை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் டெய்லி நியூஸ் பத்திரிகையில் விளையாட்டு எழுத்தாளராகவும் பின்னர் விளையாட்டு பத்திரிகையாசிரியராகவும் பணியாற்றிய அவர் 2015-2020 வரை குழு விளையாட்டு ஆசிரியராக சேவை செய்தார். 2006 முதல் 2015 வரை தி சண்டே நேஷன் பத்திரிகையில் துணை ஆசிரியர் (விளையாட்டு) பதவியையும் வகித்தார். தற்போது டெய்லி எஃபடி பத்திரி கையில் விளையாட்டு எழுத்தாளராக பணியாற்றி வருகிறார்.

அலெக்ஸாண்டர் பாலசூரிய (Alexandra Balasooriya)

அலெக்ஸாண்டர் பாலசூரிய இலங்கையின் ஊடகத்துறையில் பல தசாப்தங்களாக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள புகைப்பட ஊடகவியலாளராகத் திகழ்கிறார் அவர் 1977ஆம் ஆண்டு தவச பத்திரிகையில் புகைப்படக் கலைஞராக தனது தொழில்முறை ஊடகப் பயணத்தை ஆரம்பித்தார்.

1950ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி திம்பிரிகஸ்யாயவில் பிறந்த அவர் கொழும்பு இசி பத்தனக் கல்லூரியில் கல்வி பயின்றார். பள்ளிக் காலத்தி லேயே புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்ட அவர் 1985ஆம் ஆண்டின் இறுதியில் ஊடகவியல் துறையில் இணைந்து விஜய நியூஸ் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புகைப்படக் கலைஞராக பணியாற்றத் தொடங்கினார். தருணயா சிரிசுத்த இரிதா லங்காதீப, சதிமடலங்காதிய (பின்னர் தினபதா லங்காதீப என மாற்றம் பெற்றது) உள்ளிட்ட பல பத்திரிகைகளுக்கு அவர் சேவை புரிந்தார். 2019ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது