அரசின் முறையற்ற நிர்வாகத்தால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தால் பாரிய போராட்டம்

அரசின் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல்களினால் ஏற்பட்டுள்ள நட்டத்தை மக்கள் மீது சுமத்த இடமளிக்க முடியாது. அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க இது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், “உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவாகக் காணப்படும் நிலையிலும், இலங்கைக்கு எரிபொருள் வந்தடைவதற்கு முன்னரே உள்நாட்டில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

போர்ச் சூழலைக் காரணம் காட்டி 20 நாள்கள் வரை விலை மனு கோரப்படாததால், தனியார் நிறுவனங்களை விட ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 80 ரூபா மேலதிகமாகச் செலுத்தி அரசு எரிபொருளை வாங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பாரிய இலாபம் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் காரணமாக 150 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்ட வேண்டுமானால், இலங்கையிலுள்ள சுமார் 60 இலட்சம் வீடுகளிலும் தலா 3 மின்விளக்குகள் வீதம் மொத்தம் 1.8 கோடி மின்விளக்குகளை ஒரு நாள் முழுவதும் அணைத்து வைக்க வேண்டும்.

இவ்வாறான ஊழல்களால் ஏற்படும் நட்டத்தை மக்கள் மீது சுமத்தாமல், ஊழலில் ஈடுபட்டவர்களிடமிருந்தே அந்தப் பணத்தை அரசு அறவிட வேண்டும்.

அரசின் ஊழல் மற்றும் நிர்வாகத் திறமையின்மைக்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

acc

விபத்தில் தாயும் மகனும் பலி

March 26, 2026

ஊராபொல – ருவன்வெல்ல வீதியின் சப்புகஸ்தென்ன, லிஹினியாகொல்ல பகுதியில் லொறி ஒன்றும் முச்சக்கரவண்டியும் மோதியதில், முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் மகனும்

bang

பங்களாதேஷில் பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 23 பேர் உயிரிழப்பு

March 26, 2026

பங்களாதேஷில் 40 பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று புதன்கிழமை (25) மாலை படகில் ஏற முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்ததில்

fue

மே மாதம் நடுப்பகுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்?

March 26, 2026

எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருளைத் தட்டுப்பாடுகளின்றி விநியோகிக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர

mark

தமிழ்த் தேசியப் பேரவையினர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு

March 26, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் தமிழ்த் தேசியப் பேரவையினர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்புவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே யாழ்ப்பாணத்துக்கு

inai

யாழில் இணையவழிக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 26, 2026

இணையவழிக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நல்லூர் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட குடிசார் சம்மேளனம் மற்றும்

tea

யாழில் ஆசிரியர்கள் போராட்டம் – குவிக்கப்பட்ட பொலிஸார்

March 26, 2026

மேன்முறையீட்டு முடிவு வரும் வரையில், தங்களை பழைய பணியிடங்களிலேயே (பழைய பாடசாலைகளிலேயே) தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை

ams

எரிபொருள் நெருக்கடி சவால்கள்; சனிக்கிழமைகளில் விடுமுறை கோரும் மருத்துவ நிபுணர்கள்

March 26, 2026

தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி சுகாதாரத்துறையினருக்கு பெரும் சுமையாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, சனிக்கிழமையை மருத்துவர்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்குமாறு

f

ஏயர் கனடா தலைமைச் செயல் அதிகாரியின் ஆங்கில மொழி அறிக்கைக்கு பிரதமர் மார்க் கார்னி கண்டனம்

March 26, 2026

லகுவார்டியா விமான நிலையத்தில் (LaGuardia Airport) நடந்த ஏர் கனடா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் போது, நிறுவனத்தின்

central-bank

மத்திய வங்கியின் எச்சரிக்கை

March 26, 2026

மத்திய கிழக்கு போர் பதற்றம் தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக விளைவுகள் ஏற்படும் என மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ex

காணி கையகப்படுத்தல் குற்றச்சாட்டு:மன்னிப்புக் கோரிய பணிப்பாளர்

March 26, 2026

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்ராணி கிரியெல்ல சட்டவிரோதமாக காணி கையகப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என

bea

ட்ரம்ப்கைப் புகழந்த ஈரானிய நடிகையின் சர்கச்சைக்குரிய கருத்து!

March 26, 2026

ஈரானுக்கு எதிரான போர் தொடர்பில் ஈரானிய நடிகையான எல்னாஸ் நோரூசி அவுஸ்திரேலியா தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ட்ரம்ப் மற்றும்

Police_1

சந்தேக நபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்கள்

March 26, 2026

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR) மூன்றாம் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளுக்காக சந்தேகநபர்களை கைது