அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்திருக்கிறது – யுக்திய கூட்டமைப்பு

அரசாங்கம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம், ஏற்கனவே மக்கள் முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்பட்டிருப்பது குறித்து யுக்தி கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உழைக்கும் மக்களின் இயக்கங்களையும் ஜனநாயகத்தையும் நீதியையும் வென்றெடுப்பதற்கு மக்களால் நடாத்தப்படும் போராட்டங்களையும் ஆதரிக்கும் மக்கள் மன்றமான யுக்திய கூட்டமைப்பினால் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டமூலம் கடந்த 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்தவின் கூற்றுப்படி, போதிய அளவில் ஒழுங்குபடுத்தப்படாத நுண்நிதி மற்றும் பணமாகக் கடன் வழங்கும் துறையை உரிமம் வழங்கி கண்காணிக்கும் ஒரு அதிகாரசபையை நிறுவுவதும், அதன்மூலம் கடன் பெறுபவர்களை சுரண்டலிலிருந்து பாதுகாப்பதுடன் நிதியியல் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதுமே இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆனால் ‘உயர் வட்டி வீதங்களுடன்கூடிய சுரண்டல் தன்மை கொண்ட நுண்நிதிக்கடன்களால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்’ என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இப்போது மக்கள் ஏற்கனவே முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்படுவது குறித்து மிகுந்த கவலையடைகிறோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் இயற்றப்பட்டிருக்கும் புதிய சட்டம், தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான சட்டங்களை இயற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் தொடர்ச்சியான பாரம்பரியமாகும். இது நுண்நிதிக்கடன் வலையின் அடிப்படைக் காரணங்களைத் தவிர்த்து செல்கிறது. அத்தோடு பெண் கடன்பெறுனர்களுக்கான கடன் நீதியைப் புறக்கணிக்கிறது.

இச்சட்டம் குடும்பக்கடன் மற்றும் பொதுக்கடன் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ளத் தவறுகிறது. அதுமாத்திரமன்றி புதிய அதிகாரசபையில் பெண்களின் சமனான பிரதிநிதித்துவத்தைக் கட்டாயமாக்குவதிலும் இச்சட்டம் தோல்வியடைந்துள்ளது. கடன்பெறும் பெண்களின் பிரதிநிதிகளும், அவர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பில் உள்வாங்கப்படவில்லை என்றால், அவர்களது வாழ்வியல் அனுபவங்களை அதன் உறுப்பினர்கள் எவ்வாறு அறிந்துகொள்வர்? வாழ்வை முன்கொண்டுசெல்வதில் பெண்கள் வழங்கும் ஊதியமில்லா மற்றும் ஊதியத்துடன்கூடிய பங்களிப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்வர்?

கடன் வழங்கல் செயன்முறையில் துன்புறுத்துபவர்களையும், குழப்பக்காரர்களையும் ஒழுங்குபடுத்தவேண்டிய சட்ட மீளுருவாக்கமானது, அதனைவிடுத்து சமூக மட்டத்தில் இயங்கிவரும் கடன்வழங்கல் கட்டமைப்புக்களான மரண ஆதார சங்கம், விவசாய அங்கங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்களின் கூட்டமைப்புக்கள் என்பவற்றை அழிப்பதற்கு வழிகோலுகிறது. நலிவுற்ற தொழிலாளர் வர்க்கப் பெண்களுக்கு ஒரு உதவுகரமாகவும், தீங்கு விளைவிக்கும் கடன் வசூலித்தல் நடைமுறைகளிலிருந்து பாதுகாப்பு அரணாகவும் இயங்கிய அவ்வமைப்புக்களை இந்தச் சட்டம் சிதைக்கிறது என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

WhatsApp Image 2026-03-11 at 10.43.39

பிராம்டனில் வாகனங்களை திருடிய இளைஞர் கைது

March 11, 2026

பீல் பிராந்தியத்தின் மத்திய கொள்ளைத் தடுப்பு பிரிவு (Central Robbery Bureau) விசாரணையாளர்கள், பிராம்டனில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி ரைடு-ஷேர்

lo

அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்திருக்கிறது – யுக்திய கூட்டமைப்பு

March 11, 2026

அரசாங்கம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம், ஏற்கனவே மக்கள் முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை

man

தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக

March 11, 2026

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தீவிரமடைவதற்கு முன்னரே இலங்கையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரிக்கப்பட்டிருந்த

tra_An

இ.போ.சபைக்கு புதிய கலாசாரத்தைக் கொண்டு வர பாடுபடுவோம்

March 11, 2026

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக

wash

140 அமெரிக்க வீரர்கள் காயம் – பென்டகன்

March 11, 2026

ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 140 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர்

fin

பொருளாதார கண்காணிப்புக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது

March 11, 2026

வெளிவாரியான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கமைய

ns

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

March 11, 2026

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09 ஆம்

no

ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

March 11, 2026

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்

rs

மீள்குடியமர்த்தலுக்கான கொடுப்பனவு தொகை அதிகரிப்பு

March 11, 2026

மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தல் தொடர்பான வேலைத்திட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுத் தொகையை திருத்தம்

ci

மொரட்டுவ முன்னாள் மேயரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை

March 11, 2026

‘மக நெகும’ நகர்ப்புற மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மொரட்டுவ மாநகர சபையின் 112 அபிவிருத்தி திட்ட

gl

தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை மத்திய கிழக்கு மோதல்களுடன் சுமத்த வேண்டாம் – ஜி.எல்.பீரிஸ்

March 11, 2026

தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அரசாங்கம் மத்திய கிழக்கில் தற்போது தோற்றம் பெற்றுள்ள மோதல் மீது சுமத்தி விட்டு பொறுப்பில்

cabinet

வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசா கால நீடிப்பு!

March 11, 2026

மத்தியகிழக்கு ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும்