அரசாங்கத்திடமிருந்து பொலிஸாரைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் – உதய கம்மன்பில

பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில இன்று (22) எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்

தேசிய மக்கள் சக்தியிடமிருந்து பொலிஸாரைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும்
கஞ்சா பயிர்ச்செய்கை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார, பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக அரசாங்கம் முன்னுக்குப் பின் முரணான கதைகளைக் கூறி வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஒரு ‘சதி’ என நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார். கஞ்சா தோட்டத்தில் பணிபுரிந்த ஊழியர்களே அது சாந்த பத்மகுமாரவின் தோட்டம் என வாக்குமூலம் அளித்துள்ளனர். அப்படியாயின் அந்த ஊழியர்களும் வைத்தியர்களும் இந்த சதியில் பங்காளிகளா என கம்மன்பில கேள்வி எழுப்பினார்.

“தேர்தல் காலத்தில் ‘களைகளை பிடுங்கி மலர்ச் செடிகளை நடுவோம்’ என்று தேசிய மக்கள் சக்தி கூறியபோது மக்கள் அவதானமாக இருந்திருக்க வேண்டும். கொச்சை மொழியில் கஞ்சாவிற்கு ‘மலர்’ (மல்) என்று தான் கூறுவார்கள். இப்போது நாடாளுமன்றத்திற்கு ‘மலர் குமாரர்களை’ (பத்மகுமார) கொண்டு வந்து பொலிஸாரை வேட்டையாடுகிறார்கள்.” என அவர் விமர்சித்தார்.

அசோக ரன்வல எம்.பி விபத்து ஏற்படுத்திய போது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுகிறது. அதேபோல், வலிப்பன்ன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கஞ்சா மற்றும் கசிப்பு சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டதற்காக பழிவாங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸாரை தேசிய மக்கள் சக்தியின் பொலிஸாக மாற்ற இடமளிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் தரமற்ற மருந்துகளால் பாதிப்பு ஏற்பட்ட போது, அதனை கடுமையாக விமர்சித்த நளிந்த ஜயதிஸ்ஸ இன்று அமைச்சரானதும் ‘அமைச்சர் பொறுப்பல்ல’ என கூறுவது நகைப்பிற்குரியது.

“கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சட்டம் பாய்ந்ததைப் போலவே நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் எதிராக சட்டம் செயற்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட 7 இரகசிய ஒப்பந்தங்களில் ஒன்று மருத்துவத் துறை சார்ந்தது. இதன் மூலம் இந்திய தர நிர்ணயத்தை (Indian Pharmacopeia) இலங்கையில் அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தரமற்ற இந்திய மருந்துகளால் நோயாளர்கள் உயிரிழக்கும் நிலையில், இவ்வாறான ஒப்பந்தங்கள் நாட்டுக்கு ஆபத்தானவை.”

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஒப்பந்தங்களை நாட்டுக்கு வெளிப்படுத்தாமல் மறைப்பது ஏன்? தோல்வியடைந்த மாணவன் தனது முன்னேற்ற அறிக்கையை ஆற்றில் வீசுவதைப் போல, நாட்டுக்குத் துரோகம் செய்யும் ஒப்பந்தங்களை அரசாங்கம் மறைப்பதாக கம்மன்பில குற்றம் சாட்டினார்.

“இந்தியா எமது அண்டை நாடு, ஒரு வளர்ந்து வரும் வல்லரசு. அவர்களுடன் நட்புறவைப் பேணுவது அவசியம். ஆனால் அந்த நட்பிற்காக இலங்கை மக்களின் உயிரைப் பலிகொடுக்க முடியாது. தரமற்ற மருந்துகளால் ஏற்படும் மரணங்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் பகிரங்க விவாதத்தை ஆரம்பிக்க வேண்டும்,” என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

By C.G.Prashanthan

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது