அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழா!

உயர்கல்வித் துறையில் சுமார் 17 வருடங்களாக சேவையாற்றி வரும் அமேசன் College & Campus கல்வி நிறுவனத்தின்  பட்டமளிப்பு விழா, 2025 ஆம் ஆண்டு நேற்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் – Lotus மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், Diploma, HND, Degree, Masters ஆகிய நிலைகளில் கல்வி பயின்ற சுமார் 200 மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். குறிப்பாக, Psychology, Business Management, IT, English, Teacher Training போன்ற முக்கிய துறைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், பல்கலைக்கழக மானிய ஆணைகுழுவின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர், பேராசிரியர் Kshanika Hirimburegama அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

மேலும், விருந்தினராக மலேசிய உயர் ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் (Counselor, High Commission of Malaysia), Khairul Iskandar Md. Yusof கலந்துகொண்டார்.

விசேட அதிதிகளாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் (Former Vice Chancellor) Dr. Kumara Hirimburegama, பொருளியல் பேராசிரியர் Prof. Wasantha Athukorala, களனிப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை பேராசிரியர் Prof. S.J. Yogarajah, கணினி மற்றும் தகவல் பள்ளியின் இணைப் பேராசிரியர் மற்றும் பீடாதிபதி Dr. Rishkan Basheer, மலாயாப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் மற்றும் முதுகலை ஆராய்ச்சியாளர் Dr. U.L.M. Ashker, திருக்கோவில் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் Rajgopaal Uthayakumar, இசுருபாயாவின் பிரதி கல்விப் பணிப்பாளர் S. Sethurathnam, ஹபீப் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஆலோசகர் Rushdhie Habeeb, அய்ன்சா ஹோல்டிங்ஸ் இணை நிறுவனர் மற்றும் குளோபல் மெடிக்கல் சேர்விசஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Dr. Ajay Prasad, இலங்கை கனடா வர்த்தக சபையின் தலைவர் . M.H.K.M. Hameez, கொழும்பு அசோசியேட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி. Ajra Azhar ஆகிய பல பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Amazon உயர்கல்வி நிறுவனமானது கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் மூன்றாம் நிலைய தொழில்துறை கல்வி ஆணைக்குழுவின் (Tertiary and Vocational Education Commission – TVEC) கீழ் பதியப்பட்ட நிறுவனமாகும்.

இதுவரை சுமார் 8 விருதுகளைப் பெற்றுள்ள இந்நிறுவனம், 17 வருடங்களாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி வழங்கி, பல்வேறு சேவைகளில் முன்னணி வகித்து வருகிறது. பம்பலப்பிட்டி காலி வீதியில், நான்கு மாடிக் கட்டடத்தில், அதிநவீன வசதிகளுடன் Amazon நிறுவனம் இயங்கி வருகிறது.

நிகழ்வின் நிறைவில், இந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ‘இல்ஹாம் மரிக்கார்’ , கல்வித் துறையில் மேலும் பல சேவைகளை வழங்க நிறுவனம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

By C.G.Prashanthan

WhatsApp Image 2026-09-22 at 10.27.15 AM

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் !

September 22, 2026

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு அறியப்படுத்தியுள்ளார். அதன்படி, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள்

court-judge-hammer-gavel-696x398

22வது திருத்தம் -சர்வஜனவாக்கெடுப்பு அவசியமில்லை மூன்றில் இரண்டுடன் நிறைவேற்றலாம் என நீதிமன்றம் தீர்மானம்

September 22, 2026

அரசியலமைப்பின் 22வது திருத்தத்தின் சரத்துக்கள் அல்லது எந்தவொரு பகுதிக்கும் அரசியலமைப்பின் 83வது உறுப்புரையின் விதிகளுக்கு அமைவாக சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் மக்களின்

Thileepan

திலீபன் சிலை திறப்பு நிகழ்வில் மாணவர்களை பங்கேற்கச் செய்தமை குறித்து விசாரணை?

September 22, 2026

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திலீபனின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களைப் பங்கேற்கச் செய்தமை தொடர்பில் விசாரணை

dsa

இலங்கைக்கான ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் 2026 பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்

September 22, 2026

இலங்கைக்காக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் பயிற்சித் திட்டங்களின் தொடரை ஆரம்பித்து

photo-collage.png

தியாக தீபம் திலீபன் நினைவாக சித்திரப் போட்டிகள்

September 22, 2026

​அடுத்தடுத்த சந்ததிகளுக்கு எமது வரலாற்றைக் கடத்தும் முகமாக தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைப் போற்றி நடாத்தப்படும் சித்திரப் போட்டி…

Gnanasa

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடலாம்!

September 22, 2026

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாலேயே தனது 87 வயதான தாயாருடன் இணைந்து

va

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

September 21, 2026

மேற்கு – மத்திய மற்றும் அதனை அண்மித்த மத்திய- கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம்,

CM-Vijay-2

“அக். 2 காந்தி ஜெயந்தி முதல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம்!” – முதல்வர் விஜய் அறிவிப்பு!

September 21, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், மறைந்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான

790457579_1953889535287104_7272108374973593865_n

மதுராந்தகத்தில் அக். 3-இல் மு.க.ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரம்!

September 21, 2026

சென்னை: அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனை ஆதரித்துப்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“ஜெம் வீரமணி விவகாரம் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடந்திருக்காது?” – அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி குற்றச்சாட்டு!

September 21, 2026

சென்னை: தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்,

1200-675-27679355-thumbnail-16x9-ajith

“அஜித்துக்காகக் காத்திருக்கும் பொதுச்செயலாளர் பதவி!” – ரசிகர்கள் தொடங்கிய ‘தமிழக மக்கள் கழகம்’ (TMK)

September 21, 2026

கள்ளக்குறிச்சி: முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வெற்றியால் உந்தப்பட்ட நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் ‘தமிழக மக்கள் கழகம்’

618c12f4bb64efc3583f8a25311d96ad

“ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் தப்பவிடக் கூடாது!” – முதலமைச்சர் விஜய் காவல் துறைக்கு அதிரடி உத்தரவு

September 21, 2026

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீதான சிறுமி வன்கொடுமை (போக்சோ) வழக்கில் தொடர்புடைய ஒருவரைக் கூடத் தப்பவிடக் கூடாது