அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும்?

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஹார்முஸ் ஜலசந்தியால் உலகமே ஸ்தம்பித்து போயிருக்கிறது. இதனால் அமெரிக்கா போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் எப்படியாவது ஈரானிடம் பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று முயன்று வருகிறார். இதனிடையே ஈரானின் புதிய அதியுயர் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை எட்ட ஒப்புக்கொண்டுள்ளதாக, இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள் காட்டி ‘அல் அரேபியா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இது ஒரு முக்கியமான ராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், அதில் சில “முக்கிய உடன்பாடுகள்” எட்டப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும், விரைவில் ஒரு தீர்வு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் நம்பிக்கையுடன் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் டிரம்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகனும் நெருங்கிய உதவியாளருமான ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரான் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஈரான் தரப்பு மறுப்பு

எனினும், ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம், அமெரிக்காவுடன் நேரடி அல்லது மறைமுகத் தொடர்புகள் எதுவும் இல்லை என்று ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இது தூதரக ரீதியான தொடர்புகள் குறித்த முரண்பட்ட தகவல்களாக பார்க்கப்படுகிறது

ஐந்து நாள் அவகாசம்

“ஈரானுடன் நாங்கள் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், இந்த முறை அவர்கள் மிகவும் தீவிரமாக உள்ளனர்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்திற்காக ஐந்து நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவில் அனைவருக்கும் சாதகமான ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைக்கக்கூடும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

தாக்குதல்கள் ஒத்திவைப்பு

பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகரமாக பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர விரும்பிய டிரம்ப், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்கப்போவதாக முன்பு விடுத்த எச்சரிக்கையிலிருந்து பின்வாங்கியுள்ளார்.

ஏனெனில், அமெரிக்கா ஈரானின் மின் கட்டமைப்பைத் தாக்கினால் பதிலுக்கு இஸ்ரேலிய மின் நிலையங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள், கடல் நீரை குடிநீராக்கும் வளைகுநாடா நாடுகளின் மையங்கள் ஆகியவற்றை மொத்தமாக தகர்ப்போம் என்று ஈரான் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஈரான் அப்படி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை காலி செய்தால் பெரிய சிக்கல் ஏற்படும். அதேபோல் மின் கட்டமைப்பு குலைந்தாலும் வளைகுடா நாடுகள் மீண்டு வருவது கடினம்.

ஹார்முஸ் ஜலசந்தி

எல்லா சிக்கலுக்கும் ஹார்முஸ் ஜலசந்தி காரணமாக உள்ளது. ஈரானின் தாக்குதல்களால் தற்போது மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி, பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால் “மிக விரைவில் திறக்கப்படும்” என்று டிரம்ப் கூறியிருக்கிறார். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடைபெறுகிறது.

இப்போது போர் காரணமாக அமெரிக்க நட்பு நாடுகளின் கப்பல்களை ஈரான் அனுமதிக்கவில்லை. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

phil

எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு

March 24, 2026

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக

ca

கனடாவுக்கு அனுப்புவதாக நடந்த பாரிய நிதி மோசடி

March 24, 2026

முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்,

fi

அமெரிக்காவில் நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து

March 24, 2026

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

vidu

விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில்

March 24, 2026

திமுக தலைமையிலான கூட்டணியில் பங்கு பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான தேர்தல் கூட்டணி

Death-2

தீயைக் கட்டுப்படுத்த முயன்ற விவசாயி உயிரிழப்பு

March 24, 2026

அம்பாந்தோட்டை, வீரவில – கங்கசிறிகம பகுதியில் தனது வயலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முயன்ற 63 வயதுடைய விவசாயி ஒருவர்,

gold

சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள்; தங்கத்திற்கான விலை நிர்ணயத்தில் மாற்றங்கள்!

March 24, 2026

உலகப் பொருளாதாரம் ஒரு பக்கம் தள்ளாட்டத்தில் இருக்க, மறுபக்கம் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாக

robe

மயக்க மருந்தை குளிர்சாதன இயந்திரத்தினுள் செலுத்தி கொள்ளை

March 24, 2026

திருகோணமலை, வித்தியாலய ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து செலுத்திப் பொருட்களைக்

wa

கடும் வறட்சி; குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

March 24, 2026

மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக ஹட்டனில் பகுதியில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுமென நுவரெலியா

Poli

இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்!

March 24, 2026

பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள்

AL

ஏப்ரல் 24 வரை 2026 உ/த பரீட்சைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

March 24, 2026

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம்

girl

பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டறி நப்கின்ஸ் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

March 24, 2026

பாடசாலை மாணவிகளின் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், மாணவிகளுக்கு விடாய்க்கால அணையாடை (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டும்

mali

ஐ.பி.எல் செல்ல மலிங்கவுக்கு அனுமதி

March 24, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) பங்கேற்பதற்கு இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் எஷான் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களான