அமெரிக்காவின் சமூக ஊடக பிரபலங்களான அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன் டேட் கைது

சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சமூக ஊடக பிரபலங்களான அண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் டேட் ஆகியோர் அமெரிக்காவின் மியாமி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய அரச குற்றவியல் வழக்குத் தொடரல் திணைக்களம் அவர்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட 38 புதிய கடுமையான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்தே, பிரித்தானிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க அமெரிக்கா இந்த நாடுகடத்தல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸார் சமர்ப்பித்த புதிய ஆதாரங்களின் அடிப்படையில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சகோதரர்கள் இருவர் மீதும் பிரித்தானியாவில் மொத்தம் 59 குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

38 வயதுடைய டிரிஸ்டன் டேட் மீதான 17 குற்றச்சாட்டுகளில் 2 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள், பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு, பாலியல் சுரண்டலுக்காகக் கடத்தலை எளிதாக்கிய 3 குற்றச்சாட்டுகள் ஆகியன சில குற்றச்சாட்டுகளாகும்.

இந்த சட்டவிரோதச் செயல்கள் அனைத்தும் ஜூலை 2010 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டுக்க இடைப்பட்ட காலப்பகுதியில் பிரித்தானியாவின் லண்டனுக்கு வடக்கே உள்ள பகுதியில் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் குடியுரிமை கொண்ட இந்த சகோதரர்கள், கடந்த 2016 இல் ரோமேனியாவுக்குக் குடிபெயர்ந்தனர். ரோமேனியாவிலும் மனித கடத்தல் வழக்குகளை எதிர்கொண்ட இவர்கள், அண்மையில் விசேட விமானம் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவுக்குச் சென்றிருந்தனர். இந்நிலையில், பித்தானியாவின் அவசர நாடுகடத்தல் கோரிக்கையின் பேரில், மியாமியில் வைத்து இருவரும் சீல் வைக்கப்பட்ட பிடியாணை மூலம் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த வாரம் மியாமி மத்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.

டேட் சகோதரர்களின் அமெரிக்க சட்டதரணியான ஜோசப் மெக்பிரைட் இந்தக் கைதுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

“ஆண்ட்ரூ மற்றும் டிரிஸ்டன் இருவரும் நிரபராதிகள் என்பது இந்த உலகிற்குத் தெரியும். அவர்களின் எதிரிகளுக்கும் அது தெரியும், அதனால்தான் அவர்கள் இவ்வாறு தாக்கப்படுகிறார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் அமெரிக்காவில் டேட் சகோதரர்கள் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்குகளை முடக்குவதற்காக பிரித்தானியா தொடுத்துள்ள “அரசியல் ரீதியிலான தாக்குதல்” எனவும், அமெரிக்கா பிரித்தானியாவின் அழுக்கடைந்த அரசியல் வேலைகளுக்குப் பயன்படக் கூடாது எனவும் அவர் வாதிட்டுள்ளார்.

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை