அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான கூட்டம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில், அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post Disaster Needs Assessment – PDNA) தொடர்பான கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. முக்கிய பங்குதார நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

PDNA செயல்முறை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தேசிய திட்டமிடல் திணைக்களம் (NPD) மற்றும் பிற தேசிய-சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. உட்கட்டமைப்பு சேதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் சமூக தாக்கங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட பாதிப்புகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முறையாகத் தரவுச் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்வதே இச்செயல்முறையின் நோக்கமாகும்.

சமீபத்தில் நாட்டின் பல பகுதிகளில் உயிர், வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயலின் தாக்கங்கள் தொடர்பான ஆரம்ப நிலை PDNA தரவுகளை முன்வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அவசர நிவாரண நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மீட்பு, மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால மறுசீரமைப்புக்கான கட்டத்தை எளிதாக்க PDNA செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி பணிக்குழு திட்டத்துடன் இசைவாக வலுவான மீட்பு செயல்முறையை உருவாக்குவதற்காக PDNA மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். மேலும், எட்டு உபகுழுக்களை உள்ளடக்கிய அந்தப் பணிக்குழுவில், PDNA குழு முதன்மையான குழுவாக இருந்து, அதன் தலைமையின் கீழ் மற்ற குழுக்களை மேற்பார்வை செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நியமிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இலக்குகளை அடைவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து குழு விரிவான கலந்துரையாடலை நடத்தியது. சேதங்கள் மற்றும் இழப்புகளின் ஆரம்ப மதிப்பீடுகள், மீட்பு தேவைகளின் கணக்கீடு, அபிவிருத்தி பங்காளிகள் வழங்கவுள்ள ஆதரவின் தன்மை, மற்றும் ஒருங்கிணைப்பு சவால்கள் தொடர்பில் பிரதானமாக ஆராயப்பட்டது.

நாட்டிற்கு அபாயம்-தகவல் அடிப்படையிலான, தாங்குத்தன்மை கொண்ட, நிலைத்த மீட்பு திட்டத்தை உருவாக்க PDNA செயல்முறையை மேலும் வலுப்படுத்த தொடர்ச்சியான நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைபின் அவசியம் இதன்போது முக்கியமாக வலியுறுத்தபட்டது.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர், ஐரோப்பிய ஒன்றியம் (EU), உலக வங்கி (WB), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP), ஆசிய அனர்த்த தயார்படுத்தல் மையம் (ADPC), தேசிய திட்டமிடல் திணைக்களம் (NPD) ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த