அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில் பிள்ளையானைச் சந்திக்க அனுமதி கோரிய சட்டத்தரணிகள்!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரது சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (06) சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிராக பிள்ளையானினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு அழைக்கப்பட்டது.

இதன்போது, மனுதாரரான பிள்ளையான் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்தச் குற்றச்சாட்டு தொடர்பில் தனது கட்சிக்காரருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தற்போது அவர் அக்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், தனது கட்சிக்காரர் தற்போது வேறொரு சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மனுவைத் தொடர்வது தொடர்பில் அவரிடமிருந்து ஆலோசனைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

அதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன டி சில்வாவிடம், தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை ஆலோசனைகளைப் பெறுவதற்காகச் சந்திப்பதற்கான வாய்ப்பினை வழங்க முடியுமா என நீதியரசர்கள் குழாம் வினவியது.

அதற்குப் பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் அதற்கான கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில் அத்தகைய வாய்ப்பினை வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.

அதற்கமைய, தடுத்து வைக்கப்பட்டுள்ள மனுதாரரிடமிருந்து தேவையான ஆலோசனைகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டது.

jud_1

குற்றவாளி தப்பிச் செல்ல போலிக் கடவுச்சீட்டு கொடுத்து உதவிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

March 6, 2026

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கெசல்வத்த தினூஷ’ வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்காகப் போலி கடவுச்சீட்டைத்

ba

மட்டக்களப்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் ஜனாதிபதியினால் கொண்டு வரப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் பிரஜா சக்தி திட்டத்தில் மாநகரசபை ஆளும் கட்சி உறுப்பினர்களை உள்வாங்கப்படவில்லை

bah

ஈரானின் 78 ஏவுகணைகள் மற்றும் 143 ட்ரோன்களை அழித்துள்ளோம் – பஹ்ரைன்

March 6, 2026

மத்தியக் கிழக்கில் மூண்டுள்ள போர் ஏழாவது நாளாக நீடிக்கும் நிலையில், ஈரானின் 78 ஏவுகணைகள் மற்றும் 143 ட்ரோன்களை தாம்

man

சாந்திபுரம் பகுதியில் வீடு புகுந்து திருடிய நான்கு பெண்கள் கைது!

March 6, 2026

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஆம் திகதி 04 இரவு

joh

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

March 6, 2026

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம்

sl

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு 7 பில்லியனை கடந்தது!

March 6, 2026

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக

cru

தீவிரமடைந்து வரும் மோதல்; கச்சா எண்ணெய் விலை குறித்து கட்டாரின் எச்சரிக்கை!

March 6, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை

pil

அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில் பிள்ளையானைச் சந்திக்க அனுமதி கோரிய சட்டத்தரணிகள்!

March 6, 2026

உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத்

fiwh

உரிமம் இல்லாமல் சுழியோடி மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைத் தடுக்க நடவடிக்கை

March 6, 2026

சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்காக உள்ளூர் கடல் பகுதிகளில் கடந்த பெப்ரவரி 16 முதல் 28 வரை கடற்படையினர் எடுத்த

car

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

March 6, 2026

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் 2026-27

st

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ப்ளூ பிரிண்ட்; ஸ்டாலினின் 14 முக்கிய அம்சங்கள் வெளியீடு!

March 6, 2026

முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க”

download

படகு விபத்துக்கான முழு விசாரணைக்கு பணிப்பு

March 6, 2026

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துயரார்ந்த படகு விபத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து