அஜித் – விஜய் பற்றி இயக்குனர் பேரரசு

பல ஹிட் படங்களை இயக்கியிருப்பவர் தான் பேரரசு. அவர் விஜய் மற்றும் அஜித் என இருவரையும் வைத்து படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் இடையே இருக்கும் வித்யாசங்கள் பற்றி இயக்குனர் பேரரசு பேசியிருக்கிறார்

விஜய் மற்றும் அஜித் என இருவரையும் வைத்து ஹிட் கொடுத்த ஒரு சில இயக்குனர்களில் பேரரசுவும் ஒருவர். விஜய்யை வைத்து திருப்பாச்சி என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் பேரரசு. அப்படத்தின் வெற்றி பற்றி அனைவரும் அறிந்தது தான். அதைத்தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து சிவகாசி என்ற படத்தை கொடுத்தார். அப்படமும் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது.

விஜய்க்கு இரு மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்த பேரரசு அடுத்ததாக அஜித்துடன் இணைந்தார். அஜித்தை வைத்து திருப்பதி என்ற படத்தை இயக்கினார். என்னதான் அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அதுவும் ஒரு வெற்றிப்படமாகவே தான் அமைந்தது. இவ்வாறு அடுத்தடுத்து அஜித் மற்றும் விஜய் என இருவரையுமே இயக்கியிருக்கும் பேரரசு சமீபத்தில் விஜய்க்கும் அஜித்திற்கும் இருக்கும் ஒரு வித்யாசம் பற்றி பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, விஜய் ரொம்ப சைலண்டா இருபாருனு எல்லாருக்கும் தெரியும். ஆனால் அஜித் செம ஜாலி டைப். அனைவரிடமும் ஜாலியா விளையாடிட்டு பேசிட்டு இருப்பாரு. எதைப்பற்றியும் தலையிடமாட்டாரு, இயக்குனரை நம்பி விட்டுடுவாரு. ஆனால் விஜய் பாடல்கள் விஷயத்தில் ரொம்ப கவனமா இருப்பாரு. அவரிடம் டியூன் போட்டு காட்டிட்டு தான் ஓகே பண்ணனும். பாடலில் மிக மிக கவனமா இருப்பாரு விஜய். மற்றபடி இருவருக்கும் பெரிய வித்யாசம் எதுவும் இல்லை என்றார் பேரரசு.

இந்நிலையில் விஜய்யுடன் பழகிய மற்றும் பணியாற்றிய அனைவரும் அவர் ரொம்ப சைலன்ட் என்று தான் சொல்லியிருக்கின்றனர். ஆனால் அஜித் மிகவும் ஜாலியாக கலகலவென இருப்பார் என பேரரசு சொன்னது தான் ஒரு சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது. குறிப்பாக இன்றைய காலகட்டத்து இளம் ரசிகர்கள், என்னது அஜித் செட்டில் ஜாலியாக இருப்பாரா ? என கேட்கின்றனர். ஏனென்றால் சமீபகாலமாக அஜித் மிகவும் அமைதியாக சீரியஸான மோடிலேயே இருக்கின்றார்.

ஆனால் முன்பெல்லாம் அஜித் பேரரசு சொல்வது போல செம ஜாலியான ஆளாகவே இருந்துள்ளார். மங்காத்தா படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்தாலே அஜித்எப்படிப்பட்ட ஜாலியான ஒரு மனிதர் என்பது தெரிய வரும். அப்படிப்பட்ட அஜித் தான் தற்போது ரொம்ப சீரியஸான ஒரு மனிதராக மாறியிருக்கிறார். தற்போதும் மங்காத்தா படத்தின் மேக்கிங் வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் நெகிழ்ச்சியாக உணர்ந்து வருகின்றனர்.

அஜித்தை மீண்டும் அதுபோல ஒரு ஜாலியாக மனிதராக பார்க்கவேண்டும் என ஆசைப்படுகின்றனர். ஆனால் விஜய் ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப சைலண்டான ஒரு ஆளாகவே தான் இருந்து வந்துள்ளார். மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் மட்டுமே தான் விஜய் ஜாலியாக இருப்பார் என சொல்லப்படுகின்றது. மற்றபடி ஷூட்டிங் ஸ்பாட்டிலெல்லாம் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் விஜய் இருப்பாராம். அஜித் முன்பெல்லாம் விஜய்க்கு நேர் மாறான ஒரு ஆளாக ஜாலியாக இருந்திருக்கின்றார்.

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த

Iris

ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

March 6, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208

Rohini

வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

March 6, 2026

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய

Indi

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

March 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி

Selva

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

March 6, 2026

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக,

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12