லோகேஷ் கனகராஜ் அஜித்தை சமீபத்தில் சந்தித்தது உண்மை தான் என தெரிய வந்துள்ளது. படம் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அஜித் லோகேஷிற்கு பாசிட்டிவான பதிலை கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது
அஜித் குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி பற்றி தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. ரஜினி -கமல் படத்தை லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் அஜித்துடன் இணைய இருப்பதாக செய்திகள் வர துவங்கின. அஜித் அடுத்ததாக ஆதிக் இயக்கத்தில் தனது 64 ஆவது படத்தில் நடிக்கவிருக்கும் நிலையில் 65 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போகின்றார் என செய்திகள் வந்தன.
தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் -இயக்குனர் -தயாரிப்பாளரான சித்ரா லக்ஷ்மணன் அஜித் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில் ,அஜித் மற்றும் லோகேஷ் கனகராஜ் இடையே சந்திப்பு நடந்தது உண்மை தான். சமீபத்தில் ஒருமுறை தான் அஜித் -லோகேஷ் கனகராஜ் சந்தித்துள்ளனர். படம் பண்ணுவது தொடர்பாக தான் இந்த சந்திப்பு நடந்தது.