ஹோர்முஸ்நீரிணை (Strait of Hormuz) மீதான அமெரிக்காவின் முற்றுகை உலகளாவிய வர்த்தகச் சந்தைகளைப் பாதிக்கக்கூடும் என்று கிரெம்ளின் (Kremlin) செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் திங்கட்கிழமை எச்சரித்துள்ளார்.
ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகள் மீது முற்றுகை விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தது குறித்து கருத்து கேட்டபோது, “இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேசச் சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவே அதிக வாய்ப்புள்ளது. இதை மிக உறுதியாகக் கூற முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய பெஸ்கோவ், “பல விவரங்கள் இன்னும் தெளிவாகவும் புரிந்துகொள்ளும்படியும் இல்லை, எனவே இந்த நேரத்தில் விரிவான கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்கிறேன்,” என்றார்.
எண்ணெய், உரம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்திற்கு ஹோர்முஸ்நீரிணை ஒரு மிக முக்கியமான குறுகிய கடல் வழியாக (Chokepoint) உள்ளது. இந்த முற்றுகை திங்கட்கிழமை காலை 10 மணி (EDT) முதல் தொடங்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.